அரசியல்
திமுக கூட்டணிக்கு குட் பை... இ.கம்யூனிஸ்ட் அடுத்த ப்ளான் ?
”திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. 5 சட்டமன்ற இடைத் தேர்தல் நேரத்தில் யாரை ஆதரிப்பது என முடிவெடுப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இ.கம்யூ.,மாநில செயலாளர் வீரபாண்டியன், "தற்போதைய சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, நாங்கள் கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்,"
"தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ்.ஸைத் தவிர மற்ற அனைவரும் எங்களுக்கு நட்பான சக்திகளே. அதே சமயம், நாங்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இல்லை. நாங்கள் வெளி ஆதரவை மட்டுமே வழங்கி வருகிறோம். தற்போது அங்கும் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பில்லை. செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும்,"
"நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான எதிர்காலக் கூட்டணிகளை நாங்கள் முடிவு செய்வோம். ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நாங்கள் முன்னேறுவோம்," என்று அவர் கூறினார்.
திமுக கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக விலகி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல், அறிவாலய வட்டாரங்கள் கதிகலங்கி இருக்கிறது.