அரசியல்

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

By Jayakumar
29 Jun 2025, 05:21 PM
2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பிறந்த நாள் விழா, கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய் கூறியது போல் செயல்பட வேண்டும்

நேற்று மாலை 5.10-க்கு துவங்கிய கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், “உயிர் மூச்சு, நாடி அனைத்தும் தலைவருக்கே. இனிவரும் காலங்களில் தலைவர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் நாம் செயல்பட வேண்டும். விளம்பர பலகைகளில் என் படம் இருக்கக்கூடாது. தலைவரின் படம்தான் இருக்க வேண்டும். தலைவர் விஜய் கூறியதுபோல் செயல்பட வேண்டும்.

இன்று எலக்ஷன் கமிஷனில் இருந்து ஒரு ஆர்டர் மாதிரி போடுறாங்க. வாக்காளர் அடையாள அட்டையில் அப்பா, அம்மா பெயர், இருப்பிட சான்றிதழ் எல்லாம் இருக்கணும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு ஓட்டுபோடும்போது இது எல்லாம் இருந்தால்தான் சேர்க்க முடியும்.

மத்திய அரசுக்கு கண்டனம்

ஓட்டு போட முடியும். இல்லையென்றால், நீக்குவதாக சொல்கிறார்கள். அதை வன்மையாக நாங்கள் மத்திய அரசை கண்டிக்கிறோம். ஒவ்வொரு தெருவிலும், வாக்காளர்கள் குறித்து குறித்து தகவல் சேகரிக்கும் போது, தவெக என இருந்தால் அவர்களை நீக்க நினைக்கிறார்கள்.அது ஒரு காலமும் நடக்காது. ஏனென்றால் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் எறும்புகள்போல, எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.

ஒரு ஊரில் 80,000 தவெகவிற்கு இருக்கும். வீட்டிற்கு இரண்டு ஓட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கும். இப்பொழுது இரண்டு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் இருக்கிறோம். 2026-க்கு அடுத்து இங்கு பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தையல் மிஷின், இஸ்திரி பெட்டி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அதைத்தொடர்ந்து அவசர, அவசரமாக மேடையில் இருந்து கிளம்பி சென்றார்.