Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"- ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி!

By Christon
17 Mar 2026, 12:46 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பதிலாடு கொடுத்துள்ளார். திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று ஆதவ் அர்ஜுனா அண்மையில் கூறியிருந்தார்.

அவரின் சர்ச்சை கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதலளிக்கும் வகையில், ரஜினிகாந்த் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.