அரசியல்

கைதிகள் தப்பியோட்டம்: த.வெ.க. ஆட்சியில் சிறைத்துறை சீரழிந்துள்ளது- உதயநிதி குற்றச்சாட்டு!

By Christon
27 Oct 2026, 12:32 PM
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளில் 4 பேரைப் காவல்துறையினர் பிடித்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?

ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.

தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.