Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்

By Jayakumar
24 Jun 2025, 06:09 PM
எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எழுச்சியோடு உள்ளது. மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஓரவஞ்சனையோடு பார்க்கிறது.

அரசியல் கதாநாயகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு பார்க்கிறார் தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பு அரண் எனவும் எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், புதியதாக வந்தவர்கள் என எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

தேர்தலில் அடுத்த முதலமைச்சர் என பேசிய ஜெயலலிதாவை திமுகவின் தொண்டனான சுகவனம் தோற்கடித்தார். தற்போது வால்பாறை எம்எல்ஏ மறைந்து விட்டார். இடைத்தேர்தல் வந்தால் மற்ற கட்சிகள் என்ன செய்வார்கள் என கூறுகின்றனர்.

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்

லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று திமுக அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உட்பட 43 கட்சிகள் போட்டியிட்டது. இதில் திமுகவை தவிர்த்த 42 கட்சிகளும் டெபாசிட் இழந்தன.ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை போல 2026ல் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.