Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

நயினார் கொடுத்த நம்பிக்கை...பாஜகவில் ஐக்கியமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

By Jayakumar
01 Jun 2025, 07:15 AM
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரியாக முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜகோபாலன். இவர் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி

இந்த நிலையில், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மக்கள் விரோத ஆட்சி திமுக தமிழகத்தில் இருந்து அகற்றபட வேண்டும். அதற்காக முழு மூச்சுடன் போராட பாஜகவினர் தயாராக உள்ளோம். பாஜகவை பொறுத்தவரை யாராக இருந்தாலும், தாய்மொழி பெரியது.

மொழி பற்றி தவறாக பேசக்கூடாது

அடுத்தவர்களின் மொழி பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோல் பாமக உட்கட்சி பிரச்னை குறித்து கருத்து கூற முடியாது. ராணிப்பேட்டையில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடக்கும் அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மது தான் காரணம். தெய்வச்செயல் என்று சொல்லிக்கொண்டு நிறைய பாவச் செயல்களையே செய்கின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்டாயம் தோற்கும் என தெரிவித்தார்.