அரசியல்

திமுக கூட்டணியில் இருந்து விலகும் முஸ்லிம் லீக்!

By Christon
12 Jun 2026, 09:00 PM
தே ர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் தி.மு.க.வுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துவந்த இஸ்லாமிய கட்சிகளில் சில, த.வெ.க. அரசு அமைந்தவுடன் பாதை மாறத் தொடங்கியிருப்பதுதான் உடன்பிறப்புகளுக்கு ஷாக் குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆவேசமாக தி.மு.க. தலைமைக்கு எதிராக கொந்தளிப்பது இஸ்லாமியர்களையே புருவம் உயர்த்த வைத்துள்ளது!
இளைஞரணி இயூ.மு.லீக்.இது குறித்து இளைஞரணி தலைவர் முகமது யூ னு ஜடம் பேசினோம். 'இவ்வளவு காலம் திமுகவுடன் கொள்கை ரீதியாக கூட்டணியில் இருந்தோம். திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் முஸ்லீக் ஓட்டுகள் தான். எங்கள் கூட்டணி ஓட்டுகள் இல்லையென்றால் திமுக எந்தக் காலத்திலும் வெற்றிபெற்றிருக்க முடியாது என்ற குழ்நிலையிலும் கூட எங்களுக்கு அக்கட்சி அங்கீகாரம் கொடுத்ததே இல்லை. அவர்கள் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக்கொண்டு கூட்டணி வெற்றிக்காக உழைத்தோம் ஆனால் இப்போது தவெக எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, அமைச்சரவையிலும் சேர்த்துக்கொண்டுள்ளது.

தவெக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை அந்தநேரத்தில் மிகுந்த மரியாதையுடன் அக்கட்சி கோரியது.அன்றைய சூழலில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுதான் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்கினார் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன் கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முஸ்லீம் லீக் இணைந்திருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் இருக்கும் பக்கம் முஸ்லிம் லீக் இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் லீக் தொண்டர்களின் விருப்பம்.

வரும் ஜனவரி 20ம் தேதி எங்கள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்று பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அன்றே கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் இதுபற்றி திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் முனைவர் ஜானிடம் கேட்டோம்"முஸ்லிம் லீக் கட்சியில் உள்ளவர்கள் ஓட்டு போட்டதால் தி.மு.க வெற்றிபெறவில்லை. முஸ்லிம்கள் ஓட்டு போட்டதால் திமுக வெற்றிபெற்றது. இதை முஸ்லிம் லீக் தெரிந்துகொள்ள வேண்டும் முஸ்லிம் லீக்கில் வயதான நிர்வாகிகள் மட்டுமே இருக்கிறார்கள். இளைஞர்களே இல்லை முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலும் மனிதநேய மக்கள் கட்சியிலும் எஸ்டிபிஐ கட்சியிலும் இருக்கிறார்கள். இந்த இருகட்சிகளும் சிறுகடன்தான் இருக்கின்றன.

திமுக கூட்டணியில் திமுகவினார் வெளியேறி ஜெயித்தவர்கள் சிறார்கள் பாஜகவின் அடக்குமுறைகளை எல்லா நோக்கிலும் எதிர்த்து நூல் கொடுத்தது திமுக மட்டுமே வெறும் இருநூறு ஓட்டுகளை வைத்துக்கொண்டு, முஸ்லிம் லீக்லால்தான் திமுக வெல்கிறது என்று கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறார்கள் திமுக கூட்டணியை விட்டு முக்கிய விலகினால் இது கட்சிக்கு எந்த பாதிப்பும் நெருக்கமாக பழகியவரான அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன். அதே நெருக்கத்துடன்தான் ஸ்டாலி னும் இருந்தார்.

ஆனால், தி.மு.க.வை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு, த.வெ.கவுடன்தான் அரசியல் ரீதியாக இனிமேல் பயணிக்க வேண்டும் என அக்கட்சியினர் அழுத்தால் தவித்துக்கொண்டிருக்கிறார் காதர் மொய்தீன். தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் அவரால் உறுதியான முடிவை எடுக்க முடியாததால் அவரின் பேச்சு முரண்பாடுகளின் மூட்டையாக அமைந்திருப்பதாக திமுக ஆதரவு நிலையில் உள்ள அவரது கட்சியில் முத்த நிர்வாகிகள் திமுகவும் அதிமுகவும் இணைந்து இதுபற்றி பேச எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தே தவெக ஆதரித்ததாக முதலில் கூறிய காதர் மொய்தீன் பின்னாளில் ஆட்சி அமைக்க முயற்சித்தார்கள் என கேன் சைட் கோல் போட்டு கொண்டுள்ளனர். திமுக சார்பில் எடப்பாடி அல்லது திருமாவளவன முதன்மைவராக்குவது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட அவை ஜனநாயகத்திற்கு ஏற்புடையதாக முன் இருக்காது என்பதால் அதனை மறுத்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம் என்று தனது போக்கை அவர் மாற்றிக்கொண்டார்.

இதுவும் அதிமுகவில் மாறுபட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவர் வக்காலத்து வாங்கியது நான் திமுக தலைமையை உஷ்ணப்படுத்தியிருக்கிறது. அதிமுக எம்எல்.ஏக்கள் ஆதரவை கேட்டு கோரிய விவகாத்தில் குதிரை பேரம் நடந்திருக்கிறது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியபோது, அதற்கு நேர்மாறாக காதர் மொய்தீன் வக்காலத்து வாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என எங்களுக்கே அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் கட்சி மாறியுள்ளனர் என்பதால் இதனைக் கட்சி உடைப்பு என்று கூற முடியாது என்று காதர் மொய்தீன் கூறியதை வைத்து பார்த்தால் கட்சிக்கு அவர் ஆதரவு கொடுக்கவில்லை. அவருமே தவெகவுடனே இணைந்து பயணிக்க வேண்டும் என்ற திட்டத்துடனேயே இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

திமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? என்ற செய்தியாளர் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத அவர் இதேபோல் உறவு குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அப்படியென்றால் தற்போது இந்த உறவில் உறுதியாக இல்லை என்றுதானே பொருள். காதர் மொய்தீனின் இந்தக் கருத்துகள் கொடுத்துவரும பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து தவெக ஆதரவு நிலைப்பாட்டுக்கு வந்து விட்டார். அதை நேரடியாகவே விட்டு போங்களேன் என்று தான் திமுக தரப்பு அனல் கக்குகிறது அணிகளின் கோபத்திலும் நியாயம் இருக்கதானே செய்கிறது' என்றனர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை...எதிரியும் இல்லை....

எழுதியவர்-அரவிந்த்,கி.ச.திலீபன்