அரசியல்

உரிமைத்தொகை: நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்- தவெக எச்சரிக்கை

By Jayakumar
23 Jul 2025, 07:57 AM
பிளவுவாத கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கழகக்கொள்கை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி என்.ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாஜகவுடன் கள்ள உறவு

பின்னர் பேசிய புஸ்ஸி ஆனந்த், “ஊழல் கறைப்பிடித்த பாசிச பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு தமிழகத்தை வஞ்சிக்கும் திமுகவை தவெக தலைவர் விஜய் கடுமையாக எதிர்க்கிறார்.

ஓரணியில் தமிழகம் என்ற சூழ்ச்சி வாசகத்துடன் பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவுக்கு திமுக தங்களுக்காக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பண்ணையார்களாக வலம் வந்தவர்கள் இன்று பணியாளர்களாக வீதி, வீதியாக வலம் வருகின்றனர்.

நீங்கள் ஏமாந்து விட வேண்டாம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரில் உங்களை திமுக உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். நீங்கள் ஏமாந்து விட வேண்டாம். அந்த பணம் உங்கள் பணம் தான்,

பிளவுவாத கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது. திமுகவின் பேச்சு 2026-ல் போச்சு என்ற நிலையை மாற்ற வேண்டும்” என பேசினார்.