அரசியல்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 60 ஆண்டு கால கூட்டணியை முறித்த தவெக

By Christon
20 Jun 2026, 03:21 PM
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் லீக் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமைந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சி அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு தங்கள் கட்சியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறியதைப் போல தற்போது இணைந்த இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை அளித்தது.

அதன்படி, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். ஷாஜஹான் தவெக அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதன் இடையில் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விட கூடாது என்பதற்காக தான் இந்த முடிவு என்றும் ஆனால் தற்போது
இத்தனை ஆண்டுகள் கூட்டணியில் இருந்தாலும் அமைச்சரவையில் பங்கு என்பது திமுக அரசு கொடுத்ததில்லை. ஆனால் அமைச்சரவையில் பங்கு பெறுவது தான் எங்களின் நோக்கமாக இருந்தது அதனால் திமுகவிலிருந்து விலகியது என்றும் கூறியுள்ளார்.

இந்த முடிவு திமுக மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியது தங்கள் கூட்டணியில் வெற்றி பெற்று விட்டு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இரு கட்சிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுத்தின. தற்போது முறைப்படி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.


இந்த முடிவு காதர் தலைமையில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.முஸ்லீம் லீக் திமுக கூட்டணியில் 60 ஆண்டுகளுக்கு மேல் இடம் பெற்றிருந்தது, இப்போது தான் முதல் முறையாக விலகியுள்ளது என்று இந்த முடிவிற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது