Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

TN Cabinet Reshuffle 2024 : துணை முதல்வராகிறார் உதயநிதி?.. தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம்?

By Kumudam News
23 Aug 2024, 12:05 PM
Tamil Nadu Cabinet Reshuffle 2024 : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கோள்கிறார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.

Tamil Nadu Cabinet Reshuffle 2024 : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கோள்கிறார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். முதல்வர் நீண்ட நாட்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அதற்கு முன்னதாக தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

அதுவும் முக்கியமாக இன்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் உலா வந்தன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர்.

மேலும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு  3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதாவது அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் காந்தியின் செயல்பாடுகளில் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளதாகவும், ஆகவே அவர்களை மாற்றி விட்டு ஆவடி நாசர், கோவி செழியன் மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகவும், இதேபோல் அமைச்சர்களது பலரது துறைகளும் பெரிய அளவில் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்றது முதல் இதுவரை 2 முறை மட்டுமே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இராஜ கண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த இருந்த நிலையில், அவர் மாற்றம் செய்யப்பட்டு எஸ். எஸ். சிவசங்கர்  போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

இதேபோல் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் எம்.எல் .ஏ இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதேபோல் 11 அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்தபடி தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படுமா? என தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் தனக்கு இது குறித்து தகவல் ஏதும் வரவில்லை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.