Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

வைகோ வீட்டில் திருமணம்.. முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த துரை வைகோ!

By Kumudam News
21 Sep 2024, 07:20 PM
Durai Vaiko Dughter Wedding Invitation To CM Stalin : இயக்கத் தந்தை தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்

Durai Vaiko Dughter Wedding Invitation To CM Stalin : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவரது மகனும், எம்.பி.யுமான துரை வைகோ மதிமுக முதன்மைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், துரை வைகோ, தனது மனைவியுடன் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இது தொடர்பாக துரை வைகோ ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘’தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதியை அவரது இல்லத்தில்  இன்று சந்தித்து எனது மகள் திருமண அழைப்பிதழை அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதாக தெரிவித்தார்.

இயக்கத் தந்தை தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்  

அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதிற்கும், இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் முதல்வரின்  அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது என்று முதல்வரிடம் தெரிவித்தேன். 

குறிப்பாக எனது திருச்சிராப்பள்ளி தொகுதியில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில்  தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தேன்’’என்று துரை வைகோ கூறியுள்ளார்.