தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டார்.
நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம் :-
தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது. ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த கடனளவில் ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடனாகும். எஞ்சிய ரூ. 3.18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகும்.
60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.
தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது.
தமிழத்தில் 2021ம் ஆண்டு ரூ. 46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச்செலவீனம் குறைந்துள்ளது.
வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22.8 சதவீதமாகும். தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.