மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், முதலமைச்சர் விஜய்யும் இன்று அன்று நேரில் சந்தித்துப் பேசித் தங்கள் நட்புறவை வெளிப்படுத்தினர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் வீட்டிற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். வீட்டின் வாசலிலேயே நின்று புன்னகையுடன் ராகுல் காந்தியை வரவேற்றார் விஜய். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருவரும் பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்துத் தீவிரமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
வீட்டு ஆலோசனையைத் தொடர்ந்து, இருவரும் அருகில் உள்ள ஒரு பிரபல கஃபேவிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கேப்புசினோ காபி (Cappuccino), டிரமிசு (Tiramisu) கேக் மற்றும் குக்கீஸ்களை (Cookies) ஆர்டர் செய்து சாப்பிட்டபடியே தங்களது பேச்சைத் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வழக்கமான அரசியல் சந்திப்பாக இல்லாமல், மிகவும் இயல்பான ஒரு கஃபே சந்திப்பாக இது அமைந்தது. உணவகத்தில் இரு தலைவர்களையும் கண்டதும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். பொதுமக்கள் சிலருடன் இருவரும் இயல்பாகப் பேசி, செல்ஃபி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.