Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் 10 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து!

By Christon
10 Dec 2025, 10:50 AM
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்காக, சுமார் 10 ஆயிரம் பேருக்கு அசைவம் மற்றும் சைவ உணவு வகைகளுடன் கூடிய தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் நேற்று இரவு முதல் இந்த உணவு வகைகளைத் தயாரித்தனர்.

காலைச் சிற்றுண்டி (டிபன்) மெனு

பொதுக்குழு உறுப்பினர்களுக்குக் காலையில் வழங்கப்பட்ட சிற்றுண்டியில் (டிபனில்) கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வாட்டர் பாட்டில், காபி மற்றும் டீ ஆகியவை இடம்பெற்று இருந்தன.

மதிய அசைவ உணவுப் பட்டியல்

மதிய உணவுக்காகப் பரிமாறப்பட உள்ள அசைவ உணவுப் பட்டியலில் பிரட் அல்வா, மட்டன் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, கத்திரிக்காய் கட்டா, மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சிரம் மீன் வறுவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி மற்றும் பருப்பு பாயாசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மதிய சைவ உணவுப் பட்டியல்

சைவ உணவுப் பட்டியலில், தம்ஃப்ரூட் அல்வா, புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல், மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி, பிளாக்காய், உருளை மசாலா, பருப்பு வடை, அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், தயிர், பருப்பு பாயாசம் மற்றும் வாழைப்பழம் ஆகிய இடம் பெற்றுள்ளன.