இந்தியா

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

By MUTHUKRISHNAN
21 Jun 2025, 01:09 PM
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனநலன் ஆரோக்கியத்திற்கு யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து, 177 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆளுநர்கள், திரையுலக பிரபலங்கள் யோகா செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். அதுத்தொடர்பான செய்தி தொகுப்பு இது.

உலக யோகா நாளையொட்டி, இன்று காலை கன்னியாகுமரி கடற்கரையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், குமரி மாவட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பில் நடைபெற்ற யோகப்பயிற்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு யோகா செய்தார்.




கர்நாடகா மாநிலம் ஜெயநகரில் உள்ள கிட்டூர் ராணி சென்னம்மா ஸ்டேடியத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில், எம்பி தேஜஸ்வி சூர்யா யோகா பயிற்சி மேற்கொண்டார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

மதுரை வேலம்மாள் சர்வதேச உசேன் போல்ட் மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.


11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தில்லியில் யோகா பயிற்சி மேற்கொண்டார் மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான்


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் தனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டார் முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.


விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற யோகா தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.


உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று யோகாசனம் செய்தார்.


ஹரியானாவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா" (Yoga for One Earth, One Health) என்பது குறிப்பிடத்தக்கது.