Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை... கண்டெயினரை மீட்கும் பணி தீவிரம்!

By VASUKI
30 May 2025, 09:49 PM
வானியக்குடி கடலில் மிதக்கும் கண்டெயினரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உட்பட பல்வேறு பொருட்கள் 640 கண்டெய்னர்களில் இருந்தது. தற்போது இதனை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மூழ்கிய கப்பலில் இருந்து பல கண்டெய்னர்கள் மீட்கப் பட்டது. சில கண்டெய்னர் கள் கேரள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. இந்த நிலையில் கப்பல் மூழ்கி 6 நாட்களை கடந்த நிலையில் கடலில் உள்ள நீரோட் டத்தில் கேரள கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதிக்கு வந்தது. அதில் ஒரு கண்டெய்னர் மற்றும் சாக்கு மூட்டைகள் குமாரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக் குடி கடற்கரையில் கரை ஒதுங்கியது. சில மூடைகள் உடைந்து வெள்ளை நிற பிளாஸ்டிக் பால்களாக மிதந்து அலை காரணமாக கரையில் ஒதுங்கிய நிலையில் காணப்படுகிறது.

அதேபோல் மணவாளக்கு றிச்சி அருகே சின்னவிளை கடற்கரை பகுதியிலும் பொருட்கள் கரை ஒதுங்கியது.இந்த நிலையில் கடலில் கிடக்கும் கண்டெய்னர் மற்றும் சாக்கு மூட்டைகளை அகற்றுவதற்காக குஜராத்தில் இருந்து மரைன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சென்டரை சேர்ந்தவர்கள் வாணியக் குடிவந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலை கடலில் மிதக்கும் கண்டெய்னரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகா ரிகள் மற்றும் குஜராத்தை சேர்ந்த மூலப்பொருட்கள் சொந்தமான நிறுவத்தினரும் கடற்கரைக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்