Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ICUவில் ரத்தன் டாடா… வெளியான பகீர் தகவல்!

By sumalekha
10 Oct 2024, 02:42 AM
வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவசர சிகிச்சை பிரிவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரத்தன் டாடா உள்ளதாகவும், அவரின் உடல் நிலை சற்று சவலைக்கிடமாகவே உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. 

இதனைத் தொடர்ந்து, தனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பொய்யானது என தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார் ரத்தன் டாடா. அதாவது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 

இது குறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியதாவது,  “எனது உடல் நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.  யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ரத்தன் டாடா பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், மீண்டும் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.