இந்தியா

தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா விமானங்கள் - அவதிக்குள்ளாகும் பயணிகள்.. காரணம் என்ன?

By VASUKI
18 Jun 2025, 08:15 AM
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக போயிங் விமானத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12 முதல் 17ஆம் தேதி வரையான நேற்று மாலை 6 வரையிலும் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் இந்த திடீர் அறிவிப்பால் பாதிக்கப்பட்டனர்.

அகமதாபாத் - லண்டன் இடையேயான AI-171 போயிங் விமான விபத்து ஏற்பட்ட விமானத்தில் பயணித்த ஒரு பயணியை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விமானத்தில் ஆய்வு மேற்கொள்வதால் 66 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள ரன்வே விமான ஒளிப்பாதை தொடர்பான தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது 66 விமான சேவைகளை ஜூன் 12 முதல் ஜூன் 17 வரை ரத்தானதாக அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கோல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கிடையேயானவையாக உள்ளன. பயணிகள் மிகுந்த குழப்பத்தில் சிக்கி வருகின்றனர். ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள், முழுமையான இழப்பீடு மற்றும் சேவைகள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் பயணிகள் சேவைக்கான ஒழுங்குமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது இந்நிலையில், ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை பற்றிய சமீபத்திய செயல் தரவுகளை இயக்குநரகம் மறுஆய்வு செய்ததுள்ளது. அவற்றில் போயிங் 787 விமானத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் www.airindia.com அல்லது ஏர் இந்தியா மொபைல் செயலியில் தங்களது விமான நிலையை பரிசோதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.