Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து – 6 பேர் பலி?

By Jayakumar
30 Jun 2025, 07:12 PM
தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள தொழில்சாலையில் பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் காலை 9 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையில் விபத்து

ஹைதராபாத் அருகே உள்ள பாஷமைலாரமில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சிகாச்சி கெமிக்கல்ஸ் வளாகத்த்தில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயைக் கட்டுப்படுத்த 11 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மீட்பு பணிகள் தீவிரம்

காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.இந்த தொழிசாலையில் ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் பிரவின்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டனர். பல்வேறு துறை பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் மீட்புப் பணியில் இணைந்தனர்.