Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

11 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான பள்ளி மாணவர்கள்

By Jayakumar
11 Jun 2025, 01:06 PM
காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் பகுதியை சேர்ந்த அஜய் (22 வயது) என்ற வாலிபர், 8 ம் வகுப்பிலும், 9 வகுப்பிலும் பயிலும் 3 மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான புகாரை அடுத்து, காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் வாலிபர் அஜய் ஆகியோரை கைது செய்து காவல் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் அஜய் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.