Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

தவெக மாநாட்டிற்கு நிச்சயம் போவேன்... சூப்பர் குட் பிலிம்ஸில் விஜய்?... ஜீவா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

By nishika
18 Oct 2024, 12:33 PM
விஜய்யின் தவெக மாநாட்டிற்கு போவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

கே ஜி பாலசுப்ரமணி இயக்கத்தில்  நடிகர்கள் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளாக் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நேற்று (அக். 17) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜீவா, “நாங்கள் கைதட்டலுக்காக ஏங்கக்கூடிய ஜாதி அதற்காக தான் இது மாதிரியான படங்களை தேர்வு செய்கின்றோம்” என்றார்.

பின்பு இதில் நடித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து  கொள்ளவில்லை என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜீவா, “அவருக்கு தனிப்பட்ட வேலைகள் ஏதாவது இருந்திருக்கலாம். அதனால் கூட வராமல் இருந்திருக்கலாம். எனக்கும் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வேட்டையன் திரைப்படம் வெளியான அடுத்த நாளே பிளாக் திரைப்படத்தை வெளியானது. எப்படி இருந்தாலும் அதிக திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் தான் வெளியாகியிருக்கும். அதேபோல் மற்ற திரைப்படங்களோடு வெளிவந்திருந்தாலும் குறைந்த அளவு திரையரங்குகள் தான் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும். இந்த திரைப்படம் 8 மாதங்களுக்கு முன்பே வெளியாக கூடிய படம். அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்பதால் தள்ளிப் போனது. இந்த முறையும் தள்ளி வைத்தால் தீபாவளிக்கு நிறைய படங்கள் வெளியாகிறது. எனவே இந்த படத்திற்கு இந்த டைம் சரியாக இருந்ததால் திரைப்படத்தை வெளியிட்டோம். SMS போன்ற படங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு இயக்குனர்கள்தான் கதைகளை எழுத வேண்டும். SMS போன்ற படங்களை பண்ண வேண்டும் என்றால் அதில் நிச்சயமாக சந்தானம் இருக்க வேண்டும்" என்றார்.

சூப்பர் குட் ஃபிலிமில், விஜய்யை வைத்து தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது குறித்து பேசிய அவர், “நாங்களே வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம். 69க்கு பிறகு விஜய் என்ன பண்ண போறாருன்னு தெரியல? விஜய் தொடர்ந்து படம் பண்ணினால் அது நூறாவது படமாக அமைவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. விஜய்யின் தவெக மாநாட்டிற்கு போவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன்” என உற்சாகமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பிளாக் திரைப்படம் குறித்து பேசிய அவர், “இந்த படத்தில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இதே கதையை எங்கள் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ்  தயாரிப்பில்  எடுத்திருந்தால், என் அப்பா என்னடா இது ரீல திருப்பி போட்ட மாதிரி  இருக்கின்றது  என கமெண்ட் செய்திருப்பார். 

ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள் வெளியான காலங்களில் எனக்கு அந்தளவிற்கு  பெயர்கள் இல்லை. ராம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்த பொழுது ஷோ கேன்சல் ஆகி  மொக்கையேல்லாம் வாங்கி இருக்கின்றோம். அப்போதெல்லாம் ராம், கற்றது தமிழ் போன்ற படங்களை தயாரிக்கவே யோசித்தார்கள், ஆனால் தற்பொழுது அது ஈசியாக நடக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் யோசிக்கின்ற அளவிற்கு இவர்கள் கதை எழுதியுள்ளார்கள், நிறைய பேர் பிளாக் 2 எப்போது வரும் என கேட்கிறார்கள்.

நிச்சயமாக பார்ட் 2 எடுத்து தான் ஆக வேண்டும் ஏனென்றால் இரண்டு படங்களுக்கு தான் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது” என நகைச்சுவையாக கூறினார்.