Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

ரஜினியை பார்த்ததும் ரசிகர் செய்த செயல்...இணையத்தில் வைரலாகும் வீடியோ

By Jayakumar
22 Apr 2025, 03:45 PM
கேரளா மாநிலம், அட்டப்பாடியில் நடிகர் ரஜினி கண்ட ரசிகர் ஒருவர் கற்பூரத்தை கையில் ஏந்தி தெய்வமே என ஆரத்தி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்
ஜெயிலர்2 படப்பிடிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் 2023ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.மேலும், இத்திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக ஜெயிலர்2 மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது.

படத்தின் படபிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தின் கோவை, ஆனைக்கட்டி மலைப்பகுதி, கேரளாவின் அட்டப்பாடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த நிலையில், தமிழக கேரள எல்லையான அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெய்லர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காட்டிய ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த் அங்கு உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றார். ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேலைகளிலும் ரசிகர்கள் தங்கி இருக்கக்கூடிய ரிசார்ட் முன்பாக கூடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை ஷூட்டிங் கிளம்பிய ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்து கும்பிடு போட்டார். இதனை தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்து விட்டு அங்கு இருந்து ஷூட்டிங் கிளம்பி சென்றார். தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.