சினிமா

தக் லைஃப் விவகாரம்: ஆதவளித்த தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசன் நன்றி

By VASUKI
05 Jun 2025, 07:40 AM
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், திரைப்படம் வெளியாவதற்கு கர்நாடகாவில் பிரச்சனை உருவானது. இந்த விவகாரத்தில் உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசனுக்கு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், அனைவருக்கும் அவரவர் மொழியில் வணக்கம் தெரிவித்தார். நடிகர் சிவராஜ் குமாரிடம் உங்களை நான் பிரித்து பார்க்கவில்லை.. தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று பேசியது சர்ச்சையானது. மேலும், கர்நாடக மக்களை உணர்வுப்பூர்வமாக பாதிப்பதாக பல்வேறு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்,

இதனால் கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகா அரசியல் கட்சிகள், அமைப்புகள், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, நீதிமன்றம் என்று அனைத்து தரப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றன்ர்.

ஆனால் கமல்ஹாசன் பொருளாதார இழப்புக்காக மன்னிப்பு கேட்கவில்லை. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், கர்நாடகா மாநிலம் தவிர உலகெங்கும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று தக் லைஃப் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல், சர்வதேச தரத்தில் தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. மணி ரத்னம் ஒரு சினிமா ஞானி. அவருடன் வேலை செய்வது எனக்கு குதூகலமாக உள்ளது. சிறந்த டெக்னிஷியன்கள் பதற்றம் இல்லாமல் பணியாற்றி இருக்கிறார்கள். மணிரத்னம் ஒரு சினிமா ஞானி. இந்த படத்தில் இன்னும் சிறப்பாக கூடுதல் அனுபவத்துடன் வந்து பணியாற்றியுள்ளார்.

கன்னட மொழி பற்றிய பேச்சு விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி. நான் மேடையில் பேசும் போது, உயிரே.. உறவே.. தமிழே.. என்று சொன்ன அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன். 'தக் லைஃப்' தவிர்த்தும் பேச வேண்டியது ஏராளம் உள்ளன. அதுதொடர்பாக மற்றொரு நாளில் பேசுவதாக தெரிவித்துள்ளார்.