சினிமா

“இனிமேல் யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - விமான விபத்து குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

By Jayakumar
17 Jun 2025, 12:19 PM
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணி வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றுக்கொடுத்ததோடு, வசூல் சாதனை படைத்தது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு

இதைத்தொடர்ந்து அதே கூட்டணியில் ஜெயிலர்2 திரைப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக படத்தின் முன்னோட்டக்காட்சியை படக்குழு வெளியிட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு கோவை, கேரளா, பெங்களூரு என பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கோவை மற்றும் கேரளா சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்துக்கொண்டு வரும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அது ஒரு துயரமான சம்பவம்

சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்பொழுது அவர் கூறுகையில். “ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறேன். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது என கூறினார். மேலும் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து கேட்டதற்கு, அது ஒரு துயரமான சம்பவம். இனிமேல் யாருக்கும் இப்படி நடக்க கூடாது என்று தெரிவித்துவிட்டு விமான நிலையத்திற்கு உள்ளே புறப்பட்டு சென்றார்.