Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Retro: கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரேமம் பட இயக்குநர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

By nagalekshmi
18 Apr 2025, 12:32 PM
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கனிமா’, ‘கண்ணாடி பூவே’ போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிலும், ‘கனிமா’ பாடலில் பூஜா ஹெக்டே போட்ட ஸ்டெப்புகளை இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு|ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், ‘ரெட்ரோ’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ரெட்ரோ’ படத்தின் டிரைலரை ‘பிரேமம்’ படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எடிட் செய்துள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இணையத்தில் வைரலாக்கும் நெட்டிசன்கள் கார்த்திக் சுப்பராஜ், அல்போன்ஸ் புத்திரன் காம்போ மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தி வருகின்றனர்.