சினிமா

வெளியானது தக் லைஃப் திரைப்படம்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

By Jayakumar
05 Jun 2025, 11:34 AM
கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.இதனை அடுத்து ரசிகர்கள் திரையரங்க வாசல்களில் கேட் வெட்டி கொண்டாடிய நிலையில், கட்டவுடகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 5 ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு வெளியானது. உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரையரங்க வாசல்களில் படத்தின் கட்டவுடகளுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்துடன் அதிரடி படமாக இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது. இந்த திரைப்படம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து உருவாக்கியுள்ள படமாகும். இந்த படம் கமல்ஹாசனின் 234-வது திரைப்படம் ஆகும்.

தமிழிலிருந்து பிரிந்தது தான் கன்னடம் என கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து கர்நாடக நீதிமன்றம் கமல்ஹாசனை, 'நீங்கள் என்ன மொழி அறிஞரா? எனவும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது எனவும் கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கக் கூறியது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம்பெறாத நிலையில், இந்த படம் இன்று கர்நாடக மாநிலத்தில் வெளியாகவில்லை.