Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

எமோஷனல் நாயகனாகும் யோகிபாபு.. வெளியான புதிய அறிவிப்பு

By nagalekshmi
17 Apr 2025, 01:31 PM
நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோயிலில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.
'மேற்குத் தொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படம் மூலம் ரா.ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்‌ஷ்மன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்திற்கு ரைட்டர், தண்டகாரண்யம் படங்களின் ஒளிப்பதிவாளர் பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். கோட், அமரன் பட கலை இயக்குநர் சேகர் கலை இயக்கம் செய்கிறார்.

சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்களின் உடை வடிவமைப்பாளர் நட்ராஜ் உடை வடிவமைப்பு செய்கிறார்.
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு அழகான காதல் கதையுடன் உருவாகும் இப்படம். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாகவும் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி இப்படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோயிலில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.