Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Suriya 46: வெளியான புதிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

By Jayakumar
11 Jun 2025, 02:25 PM
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வருபவர் நடிகர் சூர்யா. இவரது 'கங்குவா' படம் தோல்வியை தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ' ரெட்ரோ' திரைப்படம் உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தை பெற்றது.

சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், சூர்யாவுக்கு வில்லனாக இந்த படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, தனுஷின் 'வாத்தி' மற்றும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பூஜை கடந்த மே 19 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து படக்குழுவினர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் 46வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், சூர்யாவின் 46-வது படத்தின் அப்டேட் கிடைத்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.