Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

'ஸ்டாப்..ப்ளீஸ்' பதற்றத்துடன் திரிந்த சமந்தா.. முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்

By MUTHUKRISHNAN
17 Jun 2025, 04:08 PM
நடிகை சமந்தா ஏதோ பதற்றத்துடன் சாலையில் தனது காருக்காக காத்திருந்த வேளையில், முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரசிகர்கள் பின்தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா மும்பையில், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு போனில் யாரிடமோ பதற்றத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ரசிகர்கள் நடிகை சமந்தாவினை சூழ்ந்து புகைப்படம், வீடியோ எடுத்ததால் எரிச்சலடைந்தார். இதுத்தொடர்பான காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென் இந்தியா திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த சமந்தா திருமண முறிவு, அதனைத் தொடர்ந்து உடல்நல பிரச்னை போன்றவற்றால் சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய பழைய இடத்தை பிடிக்கும் முயற்சியில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நெட்பிலிக்ஸ் மற்றும் ராஜ் நிடிமோரு & கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் ஃபேண்டஸி தொடரான ’ரக்த் பிரமாண்ட்: தி ப்ளடி கிங்டமில்’ சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் ஜெய்தீப் அஹ்லாவத், ஆதித்யா ராய் கபூர், அலி ஃபசல் மற்றும் வாமிகா கப்பி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதற்காக மும்பையில் தங்கியுள்ளார் நடிகை சமந்தா. இந்நிலையில், செவ்வாய்கிழமையான இன்று காலை மும்பையில் உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே நடிகை சமந்தா பதட்டத்துடன் போன் காலில் பேசிக்கொண்டிருந்தார். தனது காரையும் பரபரப்பாக தேடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், சமந்தாவினை கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தொடங்கினர். ஒருக்கட்டத்தில் எரிச்சலைடந்த சமந்தா புகைப்படம்/வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை நோக்கி “ஸ்டாப்..ப்ளீஸ்’ என கூறினார். இதுத்தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)



மற்றொரு வீடியோவில், மேடம் போட்டோ.. போட்டோ.. என பின் தொடர்ந்து வந்த ரசிகர் ஒருவரை பார்த்து.”அரே ருகோ ஜி” (காத்திருங்கள் தயவுசெய்து) என கூறிவிட்டு உடற்பயிற்சி கூடம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள் திரும்பி சென்றார்.

இந்த வீடியோக்கள் இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவின் கீழ் பலரும் நடிகை சமந்தாவிற்கு ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். ஒரு பயனர், “பிரபலங்கள் கேட்கும் போது அவர்களை தொல்லை செய்யாமல் சுதந்திரமாக இருக்க விட வேண்டும். இவ்வாறு தொந்தரவு செய்வது நாகரீகமான செயல் அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், ”வீடியோவில் சமந்தா ஏதோ மனக்கலக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது. இந்த மாதிரி நேரத்தில் கூட அவரை பின் தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்பது சரியில்லை. அவர்களை சுவாசிக்க விடுங்கள்” என கமெண்ட் செய்துள்ளார்.
View this post on Instagram

A post shared by Voompla (@voompla)



சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் ஒரு படத்தினை இணைந்து தயாரித்து வருகிறார். இதுக்குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.