சினிமா

டபுள் ஹீரோ கதையில் இணையும் ரவி மோகன்- எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

By MUTHUKRISHNAN
03 Jun 2025, 01:27 PM
கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் 'கராத்தே பாபு' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் புதிய படத்தில் ரவி மோகன் நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இந்த புதிய படம் டபுள் ஹீரோ கதைக்களம் கொண்டதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டத்தரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரவி மோகன் - எஸ்.ஜே.சூர்யா இணைத்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.