Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

மாதம் ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க வேண்டும்.. ஜாய் கிரிசில்டா மனு!

By Christon
30 Oct 2025, 01:10 PM
தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிச் ஜாய் கிரிசில்டா குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிச் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

திருமணமும் விலகலும்

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனைக் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கருவுற்ற பிறகு, ரங்கராஜ் அவரிடமிருந்து விலகியுள்ளார்.

ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார். மேலும், ரங்கராஜால் பல முறை கருவுற்று, அவரது வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி வந்தார்.

மாதம் ரூ.6.5 லட்சம் கோரி மனு

இந்தச் சூழலில், ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ. 6,50,000 பராமரிப்புச் செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.