விமர்சனம், ஓ.ம்
ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் செம்மரம் கடத்தும் கும்பலை பிடிக்க ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அதிகாரியாக வரும் சாய்பல்லவிக்கு உதவும் போலீஸ் இன்ஃபார்மர் தனுஷ், கடத்தல்காரர் மம்முட்டிக்கு நெருங்கிய நண்பனாக மாறி, மொத்த கும்பலையும் போலீசில் சிக்கவைத்து, மம்முட்டியை அப்ரூவராக மாற்றுவதுதான் கதை.
புருஷன் போலீஸ் என்பது பொண்டாட்டிக்கே தெரியாது என்கிற எம்.ஜி.ஆர். காலத்து கதைக்கு பாலிஷ் போட்டு, தளபதி முதல் ஏற்கெனவே வந்த பல கேங்ஸ்டர் பட காட்சிகளை கோர்த்து, அதற்குள் சாய் பல்லவி கேரக்டரை சாமர்த்தியமாக சொருகி, புதிதாக எதுவும் இல்லை என்றாலும் போரடிக்காத விதத்தில் திரைக்கதை அமைத்து, தனுஷுக்கு ஒரு வெற்றியை தந்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
தனுஷின் மனைவியாக வரும் ஸ்ரீ லீலா கேரக்டரும், நடிப்பும் கிளாஸ், நடிப்பில் லீலா லீடிங் ... சாய் பல்லவி போலீஸ் உடையில் மிடுக்காக வருகிறார், துடிப்பாக சண்டை போடுகிறார்... சிறை கலவரத்தில் அவர் சாகும்போது அந்த கேரக்டரும் செத்து விடுகிறது. மம்முட்டிக்கு தளபதி தேவா கேரக்டர் அப்படியே ரிபீட்டு. ஓபனிங்கில் ரவுடியாக வந்து கலக்கும் தனுஷ் போலீஸ் என தெரிந்ததும் புஸ்வானம் ஆகிவிடுகிறார். நஸ்ருதீன் ஷா, இந்திரன் சிறப்பு.
ஒளிப்பதிவு ஓ.கே. இசை சுமார்... காட்சிகள் பல அவசரகதியில் எடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. செம்மரம் வெட்ட சென்றவர்களை ஆந்திரா போலீஸ் என்கவுண்டர் செய்வது படு செயற்கை, கொஞ்சம் கூட மனதை தொடவில்லை. ஊருக்குள் செல்வாக்குமிக்க மம்முட்டிக்கு சிறைக்குள் அவ்வளவு எதிரிகளா?
ஓ.ம் - ஓவர் திங்கிங்
3 ஸ்டார்