சினிமா

மக்கள் தலைவா - குமுதம் விமர்சனக் குழு

By Sumalekha
23 Jun 2026, 04:00 PM
அரசியல் பின்னணி கொண்ட கதையை மையமாக கொண்டு இத்திரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
காமராஜர் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல அரசியல் கட்சிகளும் இல்லை, நல்ல தலைவர்களும் இல்லை …. மக்களும் முட்டாளாகவும் சுயநலவாதிகளாகவும் மாறிவிட்டனர்: இனி ரீல்ஸ் போடுறவதான் தலைவன்! இப்படி சத்தியம் பண்ணிச் சொல்கிறார் இயக்குநர் ராம் தேவ்.

கார்ப்பரேட் முதலாளி ராதாரவி, மக்களை கவரும் பேச்சாற்றல் மிக்க சுயநலவாதியான ரவிமரியாவை எப்படிக் கட்சி தொடங்க வைக்கிறார். நாலு பேருடன் திரிந்துக்கொண்டிருந்த அவர் பின்னால் எப்படி ஒரு பெரிய கூட்டத்தை சேர்க்கிறார், அதை வைத்து மற்ற அரசியல் கட்சிகளைத் தன் பணபலத்தால் எப்படி வீழ்த்துகிறார், முடிவில் லாட்டரிக் குலுக்கல் மாதிரி கூட்டத்திலிருந்து இன்னொரு கோமாளியைத் தேர்ந்தெடுத்து, அவனை முதல்வராக்கி, மக்களை எப்படி முட்டாளாக்குகிறார் எனபது தான் கதை..

ராதாரவி, பயில்வான் ரங்கநாதன், ரவிமரியா, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, பேரரசு என நடித்தவர்கள் அனைவரும் சிறப்பு. ஒளிப்பதிவு , இசை, பாடல்கள், பரவாயில்லை. திரைக்கதை, வசனம் சுமார். கவர்ச்சி நடனம் இல்லாதது ஆறுதல்.

படம் முழுக்கப் பிரசாரம், கூட்டம், விவாதம், எனச் சலிப்பான சமாசாரங்கள். ஒன்றுகூடப் புதிதாகவோ, ரசிக்கும்படியோ இல்லை. உ.வெ.க. கட்சிக்கு ஓட்டு போட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று அள்ளிவிடுவதெல்லாம் நக்கல் என்றாலும், விக்கல்தான் வருகிறது.