Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Devara Box Office Collection : முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய தேவரா... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ஜூனியர் என்டிஆர்

By Kalandhai
28 Sep 2024, 07:12 PM
Devara Box Office Collection Worldwide Day 1 : ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்தப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Devara Box Office Collection Worldwide Day 1 : கொரட்டலா சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் தேவரா படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயிப் அலிகான், கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தேவராவுக்கு முன்னர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ரிலீஸான ஆர்.ஆர்.ஆர் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஆர்.ஆர்.ஆர், நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. 

இதனால் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணுடன் இணைந்து கெத்து காட்டிய ஜூனியர் என்டிஆர், தேவராவில் மாஸ் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். முக்கியமாக இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என இரண்டு பாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பான் இந்தியா மூவியாக வெளியான தேவரா, பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வருகிறது. தேவரா படத்தின் முதல் நாள் பாக்ஸ்(Devara Box Office Collection) ஆபிஸ் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி, ஜூனியர் என்டிஆரின் தேவரா(Devara Box Office Collection Worldwide Day 1) திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் 5ம் தேதி விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில், விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல் விஜய் அப்பா, மகன் என இரண்டு பாத்திரங்களில் நடித்திருந்தார்.

விஜய்யின் கோட் ரிலீஸுக்காக தான், ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தின் வெளியீடு 27ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. நேற்று கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படமும் திரையரங்குகளில் வெளியானது. மெய்யழகன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், ஜூனியர் என்டிஆரின் தேவரா ரசிகர்களுக்கான ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் தேவரா படத்தின் டாமினேஷன் தாறுமாறாக உள்ளது.

முதல் நாளிலேயே 172 கோடி ரூபாய் வசூலித்துள்ள தேவரா, மூன்றே தினங்களில் 500 கோடி கலெக்ஷன்(Devara Box Office Prediction) செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் தேவரா இணைவது கஷ்டம் என்றே தெரிகிறது. இந்நிலையில், தேவரா படத்தின் தெலுங்கு(Devara Telugu Version) வெர்ஷன் மட்டுமே 87 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.