சினிமா

விவாகரத்தை அறிவித்தார் பிரபல பாலிவுட் நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By Christon
15 May 2026, 05:31 PM
பாலிவுட் திரையுலகில் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் ஒருவரான நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் தங்களது விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகில் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் ஒருவரான நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் தங்களது விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரபல 'நாகினி' சீரியல் மற்றும் 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் மூலம் புகழ்பெற்ற மௌனி ராய், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை கடந்த 2022-ஆம் ஆண்டு கோவாவில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். மலையாளம் மற்றும் பெங்காலி முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணப் புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் எழுந்த சந்தேகம்

சமீபகாலமாக மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் 'அன்பாலோ' (Unfollow) செய்திருந்தனர். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் எனப் பரவிய வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மௌனி ராய் தற்போது தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனது விவாகரத்து குறித்து மௌனி ராய் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்கள் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். எங்களைப் பற்றிப் பகிரப்பட்ட பல செய்திகள் உண்மையல்ல. எங்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தனியுரிமையை மதித்தவர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார். ஜூன் 5-ஆம் தேதி இவரது புதிய திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.