சினிமா

'த்ரிஷ்யம்'- 3.. வெளியான அசத்தலான அப்டேட்..!

By Jayakumar
21 Jun 2025, 08:39 PM
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'த்ரிஷ்யம்'. இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் வெறும் ரூ.5 கோடி செலவில் உருவானது. ஆனால் வசூல் செய்ததோ ரூ.75 கோடி.

இந்த படம் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் வெளியானது.
மேலும், இந்த படம் தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

'த்ரிஷ்யம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகாதது ரசிகர்களுக்கு வரும் தந்தாலும், படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளார். 'த்ரிஷ்யம்' இரண்டாம் பாகம் வெளியாகி 3 ஆண்டுகள் கழித்து மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் கடைசியாக 'நுணாகுழி' என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் 'த்ரிஷ்யம்' மூன்றாம் பாகம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.