சினிமா

Jayam Ravi - Aarthi Divorce Case: விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தைக்கு ஜெயம்ரவி, ஆர்த்தி நேரில் ஆஜர்..!

By VASUKI
28 Nov 2024, 06:48 AM
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவர். ராஜா இயக்கத்தில் உருவான ஜெயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ஜெயம் ராஜா, ஜெயம் ரவி என்றே அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஜெயம் ரவி பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னனி தமிழ் நடிகராக திகழ்கிறார்.

சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டனர்.ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்தார். ஆனால் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவகாரத்து தருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். சேர்ந்து வாழ விரும்புவதாகவும், நேரடியாக பேச ஒரு வாய்ப்பு ஏற்படுத்து தருமாறு கேட்டுக்கொண்டார். 

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில்  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார். 

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தபோது, சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விசாரணையை டிசம்பர் 7ம் தேதி தள்ளிவைத்தார்.