சினிமா

AK-64: அஜித் மேலாளர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

By Christon
27 Jun 2025, 01:04 PM
நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ.220 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அஜித் தனது 64-வது படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக பேட்டியளித்த அவர், தனது 64-வது படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என தெரிவித்தார்.

மேலும், இந்த படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளளவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அஜித்துக்கு கதாநாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் 64-வது படம் குறித்து அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்க பயோவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் அப்டேட் அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.