Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Soori: மதுரையில் தொழிலதிபர் அவதாரம்... ‘கருடன்’ ஹீரோ சூரியின் வேற லெவல் சம்பவம்!

By Kalandhai
01 Aug 2024, 12:11 AM
Actor Soori New Hotel in Madurai : காமெடியன் டூ ஹீரோ என கோலிவுட்டை கலக்கி வரும் நடிகர் சூரி, மதுரையில் தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

Actor Soori New Hotel in Madurai : ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் அறிமுகமான சூரி, தற்போது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்ட காமெடியில் நடித்தது முதல் சூரிக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடனும் சூரி காமெடியில் களமிறங்கினார். இந்த நிலையில் தான் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்திற்குப் பின்னர் சூரியின் கேரியரே மாறியது.

கடந்தாண்டு வெளியான விடுதலை திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, சூரியின் நடிப்புக்கும் தரமான அங்கீகாரமாக அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், கருடன் படத்திலும் லீடிங் ரோலில் நடித்திருந்தார் சூரி(Soori). துரை செந்தில்குமார் இயக்கத்தில் மே மாதம் இறுதியில் வெளியான கருடன், சூரிக்கு இன்னொரு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்திலும் சூரி ஹீரோவாக நடித்தார். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு வருவதால், சூரியும் செம மாஸ்ஸாக கெத்து காட்டி வருகிறார். கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதனைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் விடுதலை 2ம் பாகமும் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து சூரியின் படங்கள் ஹிட் அடித்து வருவதால், இனிமேல் ஹீரோவாக தான் நடிப்பது எனவும் அவர் முடிவு செய்துவிட்டார். இன்னொரு பக்கம் சூரி பிஸியான தொழிலதிபராகவும் வலம் வருவது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது சொந்த ஊரான மதுரையில் அடுத்தடுத்து ஹோட்டல்கள் திறந்து வருகிறார் சூரி. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டினை சூரி தான் நடத்தி வருகிறார். சூரி சார்பாக அவரது சகோதரர்கள் நடத்தி வரும் இந்த ஹோட்டல் அம்மன் என்ற பெயரில் இயங்கி வருகிறது. 

அதோடு நின்றுவிடாமல் மதுரையின் முக்கியமான பகுதிகளிலும் சூரிக்கு சொந்தமாக ஹோட்டல்கள் இருக்கின்றதாம். இந்த வரிசையில் தற்போது திருப்பரங்குன்றம்(Thiruparankundram) அருகேயுள்ள திருநகர் பகுதியில், புதிதாக மேலும் ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளார் சூரி. மதுரையில் சூரிக்கு(Soori Hotel Name Amman) சொந்தமான அத்தனை உணவகங்களும் ‘அம்மன்’ என்ற பெயரிலேயே இயங்கி வருகின்றன. இந்நிலையில் திருநகரில் அமைந்துள்ள அம்மன் உணவகத்தை சூரி தனது குடும்பத்தினருடன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அம்மன் உணவகத்தை திறந்து வைக்க சென்றிருந்த சூரியுடன், ரசிகர்கள் போட்டிப் போட்டு செஃல்பி எடுத்தனர். இதனால் அம்மன் உணவகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலாக காணக்கப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க - வயநாடு நிலச்சரிவு.. நிவாரணம் வழங்கிய சீயான் விக்ரம் 

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், காமெடியன், ஹீரோ என அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்று வரும் சூரி, சினிமாவில் சம்பாதித்த பணத்தை ஹோட்டல் பிஸினஸில் களமிறக்கி வருகிறார். அதேநேரம் லாபம் மட்டுமே முக்கியமாக இல்லாமல், மக்களின் பசியை போக்க வேண்டும் என, குறைந்த விலையிலேயே இங்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதாம். இருப்பினும் சூரியின்(Soori Hotel Business) தொழிலதிபர் அவதாரம் மதுரையன்ஸ் உட்பட அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.