Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பொருத்தமானவர் - இயக்குநர் மணிரத்னம்

By VASUKI
05 Jun 2025, 08:14 AM
தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் தான் மிகவும் பொருத்தமான நடிகர் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 5 ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இயக்குநர் மணிரத்னம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இவர், 1983 ஆம் ஆண்டு முதல் தனது திரைப்பயணத்தை தொடங்கி இன்றளவும் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் புராண திரைப்படம் என்பதால், பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்தது.

தற்போது, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்துடன் அதிரடி படமாக இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது. இந்த திரைப்படம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து உருவாக்கியுள்ள படமாகும்.

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு - கமல் கூட்டணி மட்டுமில்லாது தமிழ் நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் இணைந்துள்ளதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாது உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

தக் லைஃப் திரைப்படம் மும்பை, காஷ்மீர் போன்ற இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. முடிவில் கமலும், சிம்புவும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் பிரமிக்கவைத்துள்ளது. ஒற்றுமையாக இருந்த இருவரும், ஏன் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கதையாக உள்ளது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் சிம்புதான் தக் லைஃப் படத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார். சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார், மிகவும் அருமையாக காட்சிகள் வந்திருக்கிறது. நிச்சயம் நடிகராக இருந்தால் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் அது கமல் மற்றும் சிம்புவுடன் மிகவும் அதிகமாக உள்ளது” என்று இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.