Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Andhagan Box Office Collection : இது தான் ரியல் கம்பேக்… பிரசாந்தின் அந்தகன் 3-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

By Kalandhai
12 Aug 2024, 04:44 PM
Andhagan Tamil Movie Box Office Collection : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படம் பல தடைகளை கடந்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டி வருகிறது.

Andhagan Tamil Movie Box Office Collection : இன்றைய மாஸ் ஹீரோக்கள் விஜய், அஜித் ஆகியோர் சினிமாவில் அறிமுகமாகும் முன்னரே டாப் ஸ்டாராக மாஸ் காட்டியவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஃபீல்ட்-அவுட்டாக இருந்த பிரசாந்த், அந்தகன் திரைப்படம்(Andhagan Movie) மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். 

இந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். 3 தேசிய விருதுகள், 5 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட மேலும் பல அவார்ட்களை தட்டித் தூக்கியது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் கோடிகளில் வசூலித்த்து அந்தாதூன். இப்படத்தின் தமிழ் வெர்ஷனாக உருவான அந்தகன், சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆக முடியாமல் கிடப்பில் கிடந்தது. ஆனால், பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.

இதனால் அந்தகன்(Andhagan) படத்தை சரியான நேரம் பார்த்து ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. அதற்கான ரிசல்ட்டும் கிடைத்துள்ளதால் அந்தகன் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் படத்தில், சிம்ரன், சமுத்திரக்கனி, ஊர்வசி, ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிரசாந்த் கண் பார்வை தெரியாத பியானோ கலைஞராக நடித்துள்ளார். அவர் ரியலாகவே பியானோ இசை கலைஞர் என்பதால் இந்த கேரக்டர் செமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் சிம்ரன், சமுத்திரக்கனி ஆகியோருடன் சேர்ந்து காமெடியிலும் மிரட்டியுள்ளார். அந்தாதூன் படத்தில் இருந்து எதையும் மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்துள்ளதால், அந்தகனுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும்(Andhagan Box Office Collection) அந்தகனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது முதல் நாளில் 60 முதல் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க - தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுசு.. அடித்து சொன்ன விக்ரம்

ஆனால், இரண்டாவது, மூன்றாவது நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் அந்தகன் வசூல் டாப் கியரில் உச்சம் தொட்டுள்ளது. வார இறுதி நாட்கள் என்பதோடு, அந்தகனுக்கு போட்டியாக வெளியான மற்ற படங்கள் எதுவும் சக்சஸ் ஆகவில்லை. இதன் காரணமாக இரண்டாவது நாளில் 1.20 கோடி ரூபாய் வரை வசூலித்த அந்தகன்(Andhagan Box Office Collection), மூன்றாவது நாளான நேற்றும் 1.15 கோடி கலெக்ஷன் செய்துள்ளது. இதனடிப்படையில் அந்தகன் படத்தின் மூன்று நாள் வசூல் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அந்தகன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகார அறிவிப்பு வெளியாகவில்லை.