Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Kanguva: மீண்டும் கங்குவா ஷூட்டிங்... சூர்யாவுக்காக இணைந்த பிரபல ஹீரோ... 2ம் பாகத்தில் ட்விஸ்ட்!

By Kalandhai
22 Jul 2024, 08:27 PM
Actor Karthi Acting with Surya in Kanguva Movie : சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் சூர்யாவுக்குப் பதிலாக பிரபல ஹீரோ இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Actor Karthi Acting with Surya in Kanguva Movie : சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பீரியட் ஜானரில் ஆக்ஷன் மூவியாக வெளியாகவிருக்கும் கங்குவா(Kanguva), கோலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் வேட்டையன், விஜய்யின் தி கோட், அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்களை விட கங்குவா மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது.
 
இதனிடையே சூர்யாவின் பிறந்தநாளை(Surya Birthday) முன்னிட்டு கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள்(Kanguva First Single) வெளியாகவுள்ளது. நாளை (ஜூலை 23) சூர்யா தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் கங்குவாவில் இருந்து ஃபயர் சாங் வெளியாகிறது. அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பே கங்குவா படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 
 
இப்படியான சூழலில் கங்குவா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது ஏன் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதேநேரம் இது பேட்ச் ஒர்க் ஷூட்டிங் தான் என்றும் சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் சூர்யாவோ தனது 44வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இதனால் கங்குவா படத்தின் ரீ-ஷூட் குறித்து இன்னும் குழப்பங்கள் நீடிக்க, இப்போது அதில் கார்த்தி(Karthi) நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. கங்குவாவில் கார்த்தி நடிக்கும் போர்ஷன்கள் அனைத்தும், படத்தின் இறுதியில் வரும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸில், ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் சூர்யா. மேலும், அது லோகேஷ் இயக்கவுள்ள ரோலக்ஸ்(Rolex Movie) படத்தின் லீடாகவும் அமைந்தது. அதேபோல் கங்குவா கிளைமேக்ஸில் கார்த்தியின் என்ட்ரி தாறுமாறாக இருக்கும் எனவும், அதுதான் கங்குவா 2ம் பாகத்தின் லீட் என்றும் சொல்லப்படுகிறது. கங்குவா படத்தில் கார்த்தி(Karthik in Kanguva) நடிப்பதை ரொம்பவே சீக்ரெட்டாக வைத்துள்ளதாம் படக்குழு.   
 
சூர்யாவும் கார்த்தியும்(Surya with Karthi) இதுவரை எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. கைதி 2(Kaithi 2) அல்லது ரோலக்ஸ் படங்களில் சூர்யா, கார்த்தி இருவரையும் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பிளான் செய்திருந்தார். ஆனால், அவருக்கு முன்னதாக சிறுத்தை சிவா முந்திகொண்டதாக தெரிகிறது. கங்குவா படத்தில் சூர்யா நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து படக்குழு இதுவரை எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. படம் வெளியாகும் போதே இதுபற்றி உண்மை தெரியவரும் என சொல்லப்படுகிறது.