ஆன்மிகம்

கவனமாய் இருக்க வேண்டிய ராசிகள் எவை? இந்த வார ராசிபலன் இதோ!

By Christon
11 Nov 2026, 06:45 AM
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான நவ.11 முதல் 17 வரையிலான பலன்கள்...

மேஷம்

சீரான நன்மைகள் வரும் காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த ஏற்றம் கிட்டும். கோப்புகளில் நிதானம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அசையும், அசையா சொத்து சேரும். புதிய நபர்களிடம் குடும்ப ரகசியம் பகிர வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடரும். முதலீடுகளை முடக்க வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு கூடும். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் வரும். பயணப் பாதை உணவை தவிருங்கள். ரத்த அழுத்தமாற்றம், தூக்கமின்மை வரலாம். விஷ்ணு வழிபாடு விசேஷம் தரும்!

ரிஷபம்

பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். வீட்டில் விட்டுக் கொடுத்தலே நிம்மதி. வாரிசுகளால் பெருமை உண்டு. சுபகாரியங்களில் அவசரம் வேண்டாம். செய்யும் தொழிலில் திட்டமிடல் முக்கியம். அரசு, அரசியலில் நிதானம் நல்லது. கலை, படைப்புத் துறையினர்க்கு கவனச் சிதறல் கூடாது. பயணத்தில் வேகம் வேண்டாம். சளி, தலைவலி உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

மிதுனம்

ஏற்றங்கள் ஏற்படும் காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டத்தொடங்கும். அதேசமயம் பொறுப்பும் அதிகரிக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். விலகி இருந்த உறவு, நட்புகள் வந்துசேரும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியம் நடக்கும். செய்யும் தொழிலில் நிதானம், நேர்மை முக்கியம். அரசு, அரசியல்துறை யினர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத்துறையினர்க்கு வாய்ப்புகள் தேடிவரும். வாகனப் பழுதை உடனே சீர் செய்யுங்கள். தூக்கம் இன்மை, அஜீரணம் உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு இனிமை சேர்க்கும்!

சிம்மம்

உயர்வுகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். அதேசமயம் திட்டமிடல் மிகமிக முக்கியம். வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து லாபம் தரும். ரத்த பந்தங்களிடம் வீண் சண்டை வேண்டாம். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அரசு, அரசியல்துறையினர் மேலிடத்தை கனவிலும் எதிர்க்க வேண்டாம். கலை, படைப்புத் துறையினர் அயல்நாடு செல்ல வாய்ப்பு உண்டு. பயணத்தில் உடைமைகள் பத்திரம். அலர்ஜி, அல்சர், தொற்று உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்!

கன்னி

விடியல் வெளிச்சம் பரவத் தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் பதவி, பெயர், பாராட்டு உயரும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். அசையும், அசையா சொத்து சேரும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில் புதிய ஒப்பந்தத்தில் கவனம் தேவை. அரசியல், அரசுத்துறையினர் கணிசமான ஆதாயம் பெறுவீர்கள். கலை, படைப்புத்துறையினருக்கு வாய்ப்புகளால் பெருமை கிட்டும். வாகனத்தில் வேகம் கூடாது. கண்கள், பற்கள் உபாதை வரலாம். விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்!

துலாம்

எண்ணங்கள் ஈடேறும் காலகட்டம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். இல்லத்தில் சந்தோஷ சூழல் நிலவும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. தம்பதியரிடையே அன்னியோன்னியம் உருவாகும். தேவையற்ற குழப்பம் தவிருங்கள். செய்யும் தொழிலில் உரிய கவனம் செலுத்துங்கள். அரசு, அரசியலில் உள்ளோர், பிறருக்கு ஜாமீன் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியம் பகிரவேண்டாம். பயணங்கள் அதிகரித்தாலும் லாபம் உண்டு. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். ஷண்முகன் வழிபாடு சந்தோஷம் தரும்!

விருச்சிகம்

நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமைகள் பேசப்படும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து மகிழ்ச்சி தரும். வீட்டில் சுமுகச் சூழல் நிலவும். தம்பதியர் இடையே ஒற்றுமை உருவாகும். அசையும் அசையா சொத்து சேரும். செலவில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் வீண் முதலீடு வேண்டாம். சட்டதிட்டங்களை முழுமையாகக் கடைப்பிடியுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் முகமூடி நட்பை முதலில் உதறுங்கள். பயணத்தில் அவசரம் வேண்டாம். அல்சர், உணவு எதுக்களிப்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு மகிழ்வு தரும்!

தனுசு

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். தாமதமான உயர்வுகள் கைகூடும். வீட்டில் வீண் தர்க்கம் யாருடனும் வேண்டாம். சுபகாரியங்களில் நிதானம் தேவை. பொது இடங்களில் குடும்ப ரகசியம் பேச வேண்டாம். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். புதிய நபர்களிடம் கவனமாக இருங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் அகலக்கால் வைக்கவேண்டாம். கலை, படைப்புத் துறையினர்க்கு சோம்பல் கூடாது. அவசியமற்ற பயணம் தவிருங்கள். சுவாசம், நரம்பு உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

மகரம்

வாக்கில் நிதானம் தேவைப் படும் காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடல் முக்கியம். இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். வீட்டில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத்துணையிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப லாடம் வரும். அரசு, அரசியலில் உள்ளோர் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் வரத் தொடங்கும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். தலைவலி, அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

கும்பம்

சாதகங்கள் உருவாகும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடல் முக்கியம். பிறர் பொறுப்பில் உங்கள் தலையீடு வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தலே நல்லது. பிள்ளைகளிடம் வீண் கடுமை தவிருங்கள். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். வரவை சேமிப்பது நல்லது. செய்யும் தொழிலில் முழு ஈடுபாடு முக்கியம். அரசு அரசியலில் உள்ளோர் பிறருக்கு வாக்குறுதி தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் சோம்பல் தவிர்ப்பது முக்கியம். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். கழுத்து, தோள், வயிறு உபாதை வரலாம். இஷ்டமகான் வழிபாடு இனிமை தரும்!

மீனம்

அவசரம், அலட்சியம் கூடாத காலகட்டம். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பிறர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் குதர்க்கம் தவிருங்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. வரவை சேமிக்கப் பழகுங்கள். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் பிறருக்கு வாக்குறுதிகள் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் புறம்பேசலை தவிருங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். கழிவு உறுப்பு, கண் உபாதை வரலாம். கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.

- யதார்த்த ஜோதிடர் ஷெல்வி