மேஷம்
எண்ணம்போல் ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கத் தொடங்கும். வரவு சீராகும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. வாரிசுகளால் பெருமை உண்டு. தேவையற்ற தர்க்கம் யாரிடமும் வேண்டாம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் வாசல் தேடி வரும். பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, கழுத்து, மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
கடகம்
உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடியகாலகட்டம்.வீட்டில் விடியல் வெளிச்சம் பரவத்தொடங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். அக்கம்பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு சீராகும். பழைய கடன்கள் பைசலாகும். கர்ப்பிணிகள் கவனம் முக்கியம். பயணத்தில் நிதானமே நல்லது. தூக்கமின்மை, அஜீரணம் வரலாம். ஷண்முகன் வழிபாடு சந்தோஷம் தரும்.
ரிஷபம்
சீரான நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம். சுபகாரியங்கள் தடங்கலில்லாமல் கைகூடி வரும். எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். உயரதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். பிறர் விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். வாகனப்பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். கழிவு உறுப்பு, பரம்பரை நோய் உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.
சிம்மம்
நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். இனிமை நிலைத்திட, இன்சொல் பேசு வது நல்லது. மூன்றாம் நபர் தலையீட்டை அறவே தவிருங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வாரிசுகள் உடல்நலத்தில் இருந்த பிரச் னைகள் நீங்கத் தொடங்கும். பணியிடத்தில் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மூட்டு, முதுகு, இடுப்பு உபாதைகள் வரலாம். தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. வாராஹி வழிபாடு வளம் சேர்க்கும்.
மிதுனம்
திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். இல்லத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். சுப காரியத் தடைகள் நீங்கத் தொடங்கும். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். விலை உயர்ந்த பொருட்கள் பத்திரம். அசையும் அசையா சொத்து சேரும். பணி மிடத்தில் நேரம் தவறாமை மிக மிக முக்கியம். அனுபவம் மிக்கவர் கள் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். பயணத்தில் வேகம் வேண்டாம். தூக்கமின்மை, மன அழுத்தம், ரத்த அழுத்த மாற்றம் வரலாம். ஏழு மலையான் வழி பாடு ஏற்றம் தரும்.
கன்னி
அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம். தம்பதியர் இடையே மனக்கசப்புகள் நீங் கும்.செலவுகளில் நிதானம் தேவை.வீடு, வாகனம் புதுப் பிக்க, மாற்ற யோகம் உண்டு. வயதில் பெரியவர்கள் உடல் நலம்சீராகும். பொறுமையே பெருமை தரும். இடமாற்றம், பொறுப்பு மாற்றம் வந்தால் புலம்ப வேண்டாம். இப் போதைய மாற்றமே எதிர் காலத்தில் ஏற்றமாகும். பய ணத்தில் எச்சரிக்கை அவசியம். தூக்கமின்மை, கழிவு உறுப்பு, உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
துலாம்
திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரத் தொடங்கும் காலகட்டம். மங்கல காரியங்கள் வீட்டில் மளமளவென வரும், உறவுகள் வருகை யால் மகிழ்ச்சி நிறையும். பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண் டாம். வரவை சேமியுங்கள். தம்பதி யரிடையே ஒற்றுமை உருவாகும். வாரிசுகளால் பெருமை சேரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணத்தை கவன மாகக் கையாளுங்கள். ஒற்றைத் தலைவலி, இடுப்பு, முதுகு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
மகரம்
வார்த்தையில் கவனம் இருந்தால் வாழ்வில் உயர்வு வரும் காலகட்டம். வீண் ரோஷம் தவிர்த்து விட்டுக்கொடுத்தால், வீட்டில் விசேஷங்கள் வரும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். வீடு, வாகன ஆவணங்கள் பத்திரம். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பொறுப்புகளில் நேரடி கவனம் தேவை. வாகனத் தில் வேகம் வேண்டாம். அடி வயிறு, கழிவு உறுப்பு, கண் உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.
விருச்சிகம்
உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வாழ்க் கைத் துணையுடன் சீரான போக்கு நிலவும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். வாரிசுகள் உடல்நலம் சீரா கும்.சுபகாரியங்கள் கை கூட, மனம்விட்டுப் பேசுங்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு உயரும். மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். பயணத்தில் ஓய்வு முக்கியம். அஜீரணம், தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.
கும்பம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். தடைநீங்கி விசேஷங்கள் வரத்தொடங்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலன் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். புது உறவால் மகிழ்ச்சி மனையில் நிறையும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். சீற்றம் தவிர்த்தால், உடனிருப்போர் ஆதரவு கிட்டும். பொறுப்பில் நேரம் தவறாமை முக்கியம். பயணத்தில் போதுமான ஓய்வு முக்கியம்.தலைவலி, சளி, பல் உபாதைகள் வரலாம். மீனாட்சி வழிபாடு, வாழ்வை மிளிரச் செய்யும்.
தனுசு
நன்மைகள் அதிகரிக்கக் கூடிய கால கட்டம். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் பரவத்தொடங்கும். சகோதர உறவுகளால் ஆதா யம் உண்டு. பெற்றோர் பெரி யோர் ஆசிகிட்டும். வரவு கடகடவென வரும். செலவில் நிதானம் தேவை. வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூடும்.தாமத மான பணி வாய்ப்புகள் கைகூடி வரும்.வாக்குறுதி தர வேண்டாம். அடிவயிறு, தோள் பட்டை, நரம்பு, அலர்ஜி பிரச்னைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
மீனம்
சிந்தித்து செயல் பட்டால், சிறப்புகள் சேரும் காலகட்டம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கத் தொடங்கும். மனம்விட்டுப் பேசினால், சுபகாரியங்கள் கைகூடி வரும். வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் பொறுப்பு உணர்வு முக்கியம். திட்டமிட்டு செயல்பட்டால், மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். இரவு நேரங்களில் பயணம் செய்வதை இயன்ற வரை தவிருங்கள். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்வு சேர்க்கும்.