மேஷம்
முயற்சிகள் பலிக்கும் காலகட்டம். அதேசமயம் வாக்கில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் சுமுகமான போக்கு நிலவும், பிறர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் விசேஷங்கள் வரும். வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் லாபம் தொடர்ச்சியாக வரும். அரசு, அரசியலில் மேன்மைகள் எண்ணம்போல் கைகூடும். கலைஞர்கள் முயற்சியில முடங்க வேண்டாம். அடிவயிறு, தலைவலி, தூக்கமின்மை வரலாம். வாகனப் பழுதை உடன் சீர்செய்யுங்கள். ராகவேந்திரர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.
ரிஷபம்
5 நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். இடமாற்றம் மனம்போல் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுப்பதே விசேஷமாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதம் தவிருங்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். எதிர்பார்த்த சுபநிகழ்வுகள் கைகூடி வரும். வாரிசுகள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். பயணத்தில் போதுமான ஓய்வு மிகமிக முக்கியம். கண்கள், பற்கள், முக உறுப்புகளில் உபாதை வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
மிதுனம்
அவசரம் அலட்சியம் கூடாத காலகட்டம்.) அலுவலகத்தில் திட்டமிட்டுச் செயல்படுதல் அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கலாம். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியங்களில் வீண் ரோஷம் வேண்டாம். செலவை யோசித்துச் செய்யுங்கள். வாரிசுகள் உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற களியாட்டம் தவிருங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர் மேலிடத்தின் வார்த்தைகளை மீறவேண்டாம். கலை, படைப்புத்துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். இரவு பயணம் செல்வதை இயன்றவரை தவிருங்கள். ஒற்றைத் தலைவலி, மூட்டு, தசை உபாதைகள் வரலாம். அரங்கன் வழிபாடு, ஆனந்தம் தரும்.
கடகம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் முன்னேற்றம் உருவாகும். பொறுப்புகளில் கவனம் முக்கியம். உடனிருப்போரிடம் வீண் தர்க்கம் வேண்டாம். இல்லத்தில் இனியவை நடக்கும். அவை தொடர, இன்சொல் முக்கியம். உறவுகளால் ஆதாயம் உண்டு. பெற்றோர் பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளில் அவசரம் கூடாது. அரசு, அரசியலில் உள்ளோர் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கலைஞர்கள் வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் வித்தைகாட்டல் கூடாது. நரம்பு, எலும்பு, மூட்டு உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, நன்மை சேர்க்கும்.
சிம்மம்
பொறுப்பும் நிதானமும் தேவைப்படும் காலகட்டம். அலுவலகப் பொறுப்புகளில் நேரடி கவனம் தேவை. பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லத்தில் சுமுக சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். இளம்வயதினர் உணர்ச்சிவசப்படல் தவிருங்கள். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் நலிவு நிலை மாறும். புதிய நபர்களை நம்பி பெரும் முதலீடு செய்ய வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் பொது இடங்களில் வாக்குறுதிகள் தரவேண்டாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. அடிவயிறு, கழுத்து, கண் உபாதைகள் வரலாம். ஈஸ்வரன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
கன்னி
பலகால முயற்சிகள் பலன் தரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டுவதில் தாமதம் ஏற்படலாம், புலம்பல் தவிர்த்துப் பொறுமையாக இருங்கள். குடும்பத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும், வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் கைகூடும். உறவுகள் யாரிடமும் வீண் ரோஷம் வேண்டாம். கையில் உள்ளதை சிக்கனமாகச் செலவிடுங்கள். கடன் தருவது, பெறுவதை இயன்றவரை தவிருங்கள். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப பலன் வரும். அரசு, அரசியலில் உள்ளோர் புறம்பேசுவோரைப் புறம்தள்ளுங்கள். கலைஞர்களுக்கு ஏற்றமான காலகட்டம். வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். அல்சர், அஜீரணம் உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மங்களம் சேர்க்கும்.
விருச்சிகம்
சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் வரும். இந்தச் சமயத்தில் வார்த்தைகளில் நிதானம் முக்கியம். இடமாற்றம் வந்தால் ஏற்பதே நல்லது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். உறவுகளிடம் இருந்த பிரிவுகள் மாறும். சிலருக்குப் புதிய வாழ்க்கை அமையும், வரவு சீராகும். ஆடை, ஆபரணப் பொருட்சேர்க்கை உண்டு. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்தின் பாராட்டு கிட்டும். கலைஞர்கள் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வாகனத்தில் நிதானம் முக்கியம். சுளுக்கு, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு, களிப்பு சேர்க்கும்.
துலாம்
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். 45 பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. இளம் வயதினர், பெற்றோர் வார்த்தைகளைக் கேளுங்கள். தம்பதியர் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் வர்த்தகத்தில் சீரான போக்கு நிலவும். அரசு, அரசியலில் உள்ளவர்கள் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு வரும். தனியே தொலைதூரம் செல்லும் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.
தனுசு
அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுமையே பெருமை தரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். இடமாற்றம் சிலருக்கு வரலாம். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற கடன்களைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். அரசு, அரசியலில் உள்ளோர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கலைஞர்கள் படைப்பு ரகசியங்களைப் பகிரவேண்டாம். வாகனப்பழுதை உடன் சீர்செய்யுங்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு சத்து உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.
மகரம்
எண்ணம்போல் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். என்னலகத்தில் விநிற றை கூறு கூடப்படும். மேலதிகாரிகள் ஆதரவு உண்டு. கோப்புகளில் கையெழுத்திடுவதில் நிதானம் முக்கியம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். விட்டுக்கொடுத்தல் இருந்தால், நிம்மதி நிலைக்கும். வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம். சுபகாரியங்கள் நடக்க, குலதெய்வ வழிபாடு முக்கியம். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிருங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு திடீர் பதவி, பாராட்டு கிட்டலாம். கலைஞர்களின் முயற்சிகள் பலன் தரத் தொடங்கும். பயணப்பாதை நட்புகளிடம் நெருக்கம் வேண்டாம். மனச்சோர்வு, தலைவலி, அஜீரணம் வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.
கும்பம்
சோம்பலை விரட்டவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் கிட்டும். வரவு சீராக இருக்கும். வாரிசுகள் மனம்போல சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து சேரும். கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். செய்யும் தொழிலில் முடக்கங்கள் நீங்கும். அரசு, அரசியலில் உள்ளவர்களுக்கு நாவடக்கம் முக்கியம். கலைஞர்கள் திறமையால் முன்னேறுவீர்கள். பயணத்தில் உடைமை பத்திரம். உணவுக்குழாய், தொண்டை, வாய்ப்புண் உபாதைகள் வரலாம். ஷண்முகன் வழிபாடு, சந்தோஷம் சேர்க்கும்.
மீனம்
திட்டமிட்டும் பொறுமையாகவும் செயல்படவேண்டிய காலகட்டம். பணி யிடத்தில் பொறுப்புச் சுமை அதிகரிக்கலாம். எந்த சமயத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் செயல்பாடுகள் கூடாது. மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். குடும்பத்தில் நல்லவை நடக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். அசையும், அசையாப் பொருட்சேர்க்கை ஏற்படும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர், பொது இடங்களில் அமைதி காப்பதே நல்லது. கலைஞர்கள் சோம்பலை அறவே தவிருங்கள். பயணப்பாதையில் பிறர் தரும் உணவு, பானத்தைத் தவிருங்கள். வயிறு, கழிவுறுப்பு, முதுகு உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.