ஆன்மிகம்

மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

By Bhavani v
14 Nov 2026, 06:27 AM
மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கு? எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்த நாளாக அமையும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடிவதுடன், நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணமும் கைக்கு வர வாய்ப்புள்ளது. கணவன் - மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். அதேசமயம், பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வழக்கமான விற்பனையும் லாபமும் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் அவசரம் காட்ட வேண்டாம். குடும்பத்தினருடன் தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகவே இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவார்கள். இருப்பினும், புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்துச் செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலைச்சலும் செலவுகளும் ஏற்படலாம். தாயாரின் உடல்நலனிலும் அக்கறை தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பல வகையிலும் சாதகமான நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாகச் செயல்படக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகவே இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். கணவன் - மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். வீண் செலவுகளால் கையிருப்புப் பணம் குறைவதுடன், சிலருக்குக் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைப்பதுடன் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவுகளை எடுக்கவும், சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் ஏற்ற நாள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், நண்பர்கள் பணம் கேட்டு வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் கவனமாகச் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளும் சாதகமாக நிறைவேறும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்தாலும், அதே நேரத்தில் திடீர் செலவுகளும் ஏற்படலாம். உறவினர்களால் சில பிரச்னைகள் உருவானாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சாதனைகள் நிறைந்த நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய சகோதரர்கள் உங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலம் மேம்படும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் இழுபறி நீடிக்கலாம். அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்துகொள்ள வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் பெரிய சிரமம் இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும் விமர்சனங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பலமுறை யோசிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகவே இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாள்களாகத் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் மீண்டும் தொடர்புகொண்டு பேசுவது உற்சாகத்தை அளிக்கும். அக்கம்பக்கத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.