மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலம் சீரா கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம் யாருக்கும் வாக்குறுதி தருவதைத் தவிருங்கள் வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் வேண்டாம். பணிபுரியும் இடத்தில் திட்டமிடல் முக்கியம். அஜீரணம், வயிறு உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழி பாடு ஆனந்தம் தரும்.
கடகம்
நன்மைகளுக்கான அறிகுறிகள் தெரி யத் தொடங்கும் காலகட்டம். தேவையற்ற சர்ச்சைகளைத் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத் தடைகள் நீங்கும். குடும்ப விஷயங்களைப் பொது இடங்களில் பேச வேண்டாம். அலுவலகத்தில் எதிர் பார்த்த இடமாற்றம் சற்றே தாமத மாகலாம். பொறுமை முக்கியம். வாகனப் பழுதை உடன் சரி செய் யுங்கள். தோள்பட்டை, இடுப்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.
ரிஷபம்
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். இல்லத்தில் இனியவை இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் தேவை. உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். வீடு, வாகனம் மாற்றும் எண்ணம் மேலோங்கும். அதில் அவசரம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை உண்டு. நேரத்துக்கு உண்பதை வழக்கமாக்குங்கள். பயணங்கள் அனுகூலமாகும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வு வரும். சுவாசம், தொற்று உபாதைகள் வரலாம். மாரியம்மன் வழிபாடு, மகிழ்வு சேர்க்கும்.
சிம்மம்
அமைதியாகச் செயல்பட்டால், நிலையான ஆனந்தம் கிட்டும் காலகட்டம். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் வேண்டாம். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வரவுக்கு ஏற்ப செலவு உண்டு. வளர்ப்புப் பிராணிகளிடம் நெருக்கம் வேண்டாம்.மாதாந்தர உபாதைகளில் அலட்சியம் கூடாது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பயணத்தில் கவனம் தேவை. அடிவயிறு, சுளுக்கு வரலாம். பார்வதி வழிபாடு, வாழ்வைப் பசுமையாக்கும்.
மிதுனம்
பொறுமை தேவைப்படும் காலகட்டம். குடும்பத்தில் சுணக்கங்கள் நீங்கும். தேவையற்ற தரல், பெறலைத் தவிருங்கள். மூன்றாம் நபர் தலையீட்டைக் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். சேமிப்பை ஆடம்பரத்திற்காக கரைக்க வேண்டாம். வழுக்க லான இடங்களில் கவனம் தேவை. யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். பணியிடத்தில் வீண் ஜம்பம் தவிருங்கள். உடல்நலத்தில் அக்கறை அவசியம். கர்ப்பிணிகள் கவனம் தேவை. வாராஹி வழிபாடு, வளமை சேர்க்கும்.
கன்னி
வாக்கு, செயலில் நிதானம் தேவைப்படும் காலகட்டம். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். பண வரவை சேமிக்கப் பழகுங்கள். குடும்ப விஷயத்தில் பிறர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். விசேஷங்களுக்குச் செல்கையில் வீண் ஆடம்பரம் தவிருங்கள். வயதில் முதியவர் கள் வழுக்கலான இடங்களில் கவனமாக இருங்கள். அலுவல கத்தில் எதிர்பாலருடன் அதிக நெருக்கம் தவிருங்கள். நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். பிரத்யங்கிரா வழிபாடு, பிரகாசிக்கச் செய்யும்.
துலாம்
உழைப்பில் உறுதி இருந்தால், உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சுணக்கம் நீங்கும். புது வரவுகளும் அதனால் ஆதாயமும் உண்டு. தரல், பெறலில் நிதானம் தேவை. ஹார்மோன் உபாதை தெரிந்தால், அலட்சியம் வேண்டாம். பணிபுரியும் பெண்கள் எதிலும் நேரடி கவனம் செலுத்துங்கள். மேலிடத்தின் பாராட்டு நிச்சயம் கிட்டும். வாகனத்தில் வேகம் வேண்டாம். காய்ச்சல், அலர்ஜி வரலாம். சமயபுரத்தாள் வழிபாடு, சந்தோஷம் தரும்.
மகரம்
உங்கள் திறமைக்கு ஏற்ப யோக மும் அனுகூலமும் கிட்டக்கூடிய காலகட்டம். அதேசமயம் வார்த்தை களில் நிதானம் தேவை. தேவை யற்ற கொடுக்கல் வாங்கல் தவி ருங்கள். ஆடை, ஆபரணம் சேரும்.புதிய நபர்களிடம் ரகசி யம் பகிர வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். பணியிடத்தில் எதிர் பார்த்த மாற்றம் கைகூடி வரும். உடனிருப்போர் ஆதரவு கிட் டும். பயணத்தில் பொறுமை முக் கியம். ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை வரலாம். காளி யம்மன் வழிபாடு, களிப்பு தரும்.
விருச்சிகம்
சுணக்கம் தவிர்த்தால் சுபிட்சங்கள் உருவாகும் காலகட்டம். குடும்பத் தில் குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன் யோன்யம் உருவாகும். சுப காரி யங்களில் தடைகள் நீங்கும். செலவுகளில் நிதானம் அவசி யம். வாக்கின் செல்வாக்கு கூடும். அலுவலகத்தில் குறையைப் பேசுவதைத் தவிருங்கள். இடமாற்றம் வரலாம். வாகனத்தில் செல்கையில் வேகம் வேண்டாம். முதியவர்களுக்கு போதுமான ஓய்வு முக்கியம். பயணத்தில் உடைமை பத்திரம். பல், கண் உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மங்களம் சேர்க்கும்.
கும்பம்
எண்ணம்போல் ஏற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். இல்லத்தில் இனி யவை நடக்கத் தொடங்கும். வாரிசுகள் உடல்நலம் சீராகும். குடும்பத்துப் பெரியோர் ஆதரவு கிட்டும். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. இளம் வயதினர், பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். பணிபுரியும் இடத்தில் மேலதி காரிகள் ஆதரவு கிட்டும். வாக்குறுதிகள் தரவேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள். எலும்பு, மூட்டு உபாதைகள் வரலாம். பொன்னி யம்மன் வழிபாடு, புகழ் சேர்க்கும்.
தனுசு
முயற்சிகளால் வெற்றி காணவேண்டிய காலகட்டம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் முன்னேற்றம் உருவாகும். வாரிசுகளால் பெருமை உண்டு. அசையும் அசையா சொத்துகளில் நிதானம் தேவை. பயணங்கள் அனுகூலமாகும். பிற மொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கர்ப்பிணிகள் ரெகுலர் செக் அப் தவறவிட வேண்டாம். பணிபுரியும் பெண்கள் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்.நாகாத்தம்மன் வழிபாடு, நன்மை சேர்க்கும்,
மீனம்
முணுமுணுப்பு தவிர்த்தால், முன் னேற்றம் உருவாகக் கூடிய காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். சுப காரியங்களின் போது, வீண் தர்க்கம் வேண்டவே வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளைக் கண்டிப்பதில் நிதானம் தேவை. புதிய நபர்களிடம் ரகசியம் பகிரவேண்டாம். பணிபுரியும் பெண்களுக்கு சீரான போக்கு நிலவும். வாகனப்பழுதில் அலட்சியம் கூடாது. அல்சர், மன அழுத்த உபாதைகள் வரலாம். கன்னியம்மன் வழிபாடு, களிப்பு சேர்க்கும்.