மேஷம்:
உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம் பணியிடத்துல உங்க மனம்போல ஏற்றமும் மாற்றமும் கிட்டும். மங்கிக் கிடந்த உங்க திறமை வெளிப்பட்டு, பாராட்டப்படும்க. உடனிருக்கும் யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம்க. இல்லத்துல நிம்மதி நிலவும்க. உங்க வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்க. சுபகாரியங்கள் கைகூடும்க. இளம் வயதினருக்கு வெளிநாட்டுக் கல்வி, பணி வாய்ப்புகள் வரும்க. திருமண முயற்சிகள் நற்பலன் தரும்க. செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும்க. முதலீடுகளை நேரடியா செய்யுங்க. அரசியல், அரசு சார்ந்தவங்களுக்கு பதவி, பாராட்டுக்கு உத்தரவாதம் கிட்டும்க. புறம்பேசும் நபர்களை புறம் தள்ளுங்க. பணத்தைக் கையாளும் சமயத்துல கவனமா இருங்க, தொலைதூரப் பயணத்துல உடைமைகளை பத்திரமா பார்த்துக்குங்க. அலர்ஜி, அடிவயிறு, சுவாச உபாதைகளை உடனே கவனியுங்க. கந்தசுவாமியைக் " மியைக் கும்பிடுங்க. வாழ்க்கைல களிப்பு நிறையும்.
ரிஷபம்:
பெருமைகள் நிலைக்கணும்னா, பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. யாரையும் பழி வாங்க நினைக்கறதும், வீணான புலம்பலும் கூடவே கூடாதுங்க. எதிர்பாராத இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விட்டுக் கொடுத்துப் போனா விசேஷங்கள் வரும்க. வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. சின்ன சினத்தீ கூட உறவுகளை சிதைச்சுடும் வார்த்தைகள்ல கவனமா இருங்க. வாரிசுகளால பெருமை சேரும்க. வீடு, மனை விஷயத்துல அலட்சியம் கூடாதுங்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடு தவிருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கத்துடன் இருக்கறது அவசியம்க. புறம்பேசும் நபரால் அவமானம் வரலாம். முழுகவனத்தோட இருங்க. தேவையற்ற இரவுப் பயணத்தை தவிருங்க. நரம்பு, கண்கள், முதுகு உபாதைகள் வரலாம்க. பெருமாளைக் கும்பிடுங்க. பெருமைகள் சேரும்.
கடகம்:
தொட்டது துலங்கும் காலகட்டம். அலுவலகத்துல உங்க பெருமை அதிகரிக்கும்க. இந்த சமயத்துல தற்பெருமை உயர்ந்துடாம பார்த்துக்கறது நல்லதுங்க. உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. மனம்போல பதவி, இடமாற்றம்,ஊதியம் கிடைக்கும்க. திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டா, எதிர்காலமும் தித்திக்கும்க. மனையில் மகிழ்ச்சி தங்கும்க. மனம்போல மணமாலையும் மகப்பேறும் கிட்டும் அறிகுறிகள் தெரியும்க. வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்க. பெற்றோர் ஆசி சந்தோஷம் அளிக்கும்க. அயல்நாட்டு செய்திகள் சாதகமா இருக்கும்க. செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும்க. புதிய முதலீடுகள் பலன் தரும்க. அரசு, அரசியல் துறையினருக்கு மேன்மைகள் உருவாகும்க. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்பு கிடைக்கும்க. வாகனத்துல செல்லும்போது லாகிரிக்கு இடம்தராம இருக்கறது அவசியம்க. சூடான பொருட்களை கவனமா கையாளுங்க, பாதம், அடிவயிறு உபாதைகளை உடனே கவனியுங்க. சுதர்சனரைக் கும்பிடுங்க. வாழ்க்கை சுபிட்சமாகும்.
சிம்மம்:
சினம் தவிர்த்தால் வாழ்க்கை சீராகும் காலகட்டம். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த திரை விலகும்க. மூன்றாம் நபர் விஷயங்கள்ல மூக்கை நுழைக்காம இருக்கறது நல்லதுங்க. சினம் சீரழிவைத் தரும் உணர்ந்து அமைதியா இருங்க. உங்க பொறுப்பை உணர்ந்து செயல்பட்டா, பெருமை நிலைக்கும்க. வீட்டுல விசேஷங்கள் படிப்படியா வரத்தொடங்கும்க. பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை கேளுங்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் கூடாதுங்க. வீடு, மனை வாங்கும் சமயத்துல பத்திரங்களை கவனமா படியுங்க. செய்யும் தொழில்ல சோம்பல் தவிருங்க. ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது கவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்க. உடனிருக்கும் யாரிடமும் கோபமும் குதர்க்கமும் வேண்டாம்க. வாகனப்பயணத்துல போதுமான ஓய்வு அவசியம்க. தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம்க. இஷ்ட அம்மனைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.
மிதுனம்:
வாக்கிலும் செயலிலும் கவனமாக இருந்தா, செல்வாக்கு நிலைக்கக் கூடிய காலகட்டம்க. பணியிடத்துல பொறுப்பு அதிகரிக்கலாம்க. அதை சுமையாக நினைச்சு வீணாகப் புலம்புவது கூடாதுங்க. சலிப்பை செயல்ல காட்டினா, பிறர் சூழ்ச்சிக்கு நீங்க பலியாக நேரிடலாம், எதிலும் பொறுப்பு உணர்ந்து நேரடியா கவனிக்கறதுதான் நல்லதுங்க. குடும்பத்துல குத்தலும் குதர்க்கமும் வேண்டாம்க. உறவுகள் யாரையும் உதாசீனப்படுத்தறதும் தவறுங்க. வாரிசுகளால பெருமை சேரும்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. செய்யும் தொழில்ல முதலீட்டைத் தவிருங்க. பங்குவர்த்தகத்துல ஆழம் தெரியாம காலைவிட வேண்டாம்க. அரசியல், அரசு சார்ந்தவங்க யாருக்கும் ஜாமீன் தருவதை தவிருங்க. வாகனத்துல வேகம் தவிருங்க. சிறிய பழுதையும் உடனே சரி செய்யுங்க. கண்கள், நரம்பு, கழிவு உறுப்பு உபாதைகள் தெரிஞ்சா உடனே கவனியுங்க. தட்சிணாமூர்த்தியைக் கும்பிடுங்க. வாழ்க்கை தழைக்கும்.
கன்னி:
நிதானமும் திட்டமிடலும் இருந்தா, ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க பெருமை பேசப்படும்க. புதிய பொறுப்புகளும் அதனால ஆதாயமும் கிட்டும்க. சிலருக்கு முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்க. தவிர்க்காம ஏற்றுக்கறது நல்லதுங்க. இல்லத்துல மகிழ்ச்சி நிறையும்க. விலகி இருந்த உறவும் நட்பும் மீண்டும் வரும்க. எதிர்காலத்துக்கான திட்டங்களை குடும்ப ஆலோசனை கேட்டு வகுத்துக்கறது நல்லதுங்க. வழக்குகள் சாதகமாக தீர்வாகும்க. ஆடை, ஆபரணம், வீடு, மனை சேரும்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்துல அக்கறை அவசியம்க. வர்த்தகத்துல வளர்ச்சி அதிகரிக்கும்க. திட்டமிட்ட ஒப்பந்தங்கள் நன்மை தரும்க. வெளிநாட்டு வாணிபம் ஆதாயம் தரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க புகழ் அதிகரிக்கும்க. இந்த சமயத்துல யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம்க. எதிர்பாலரிடம் எச்சரிக்கையா பழகுங்க. அவசியமற்ற பயணங்களைத் தவிருங்க. வயிறு, ஜீரணக் குறைபாடு, சர்க்கரை உபாதைகளை உடனே கவனியுங்க. மாருதியைக் கும்பிடுங்க. மங்களங்கள் தேடிவரும்.
துலாம்:
நல்லவை நடக்கக்கூடிய காலகட்டம். அதேசமயம் செயல்கள்ல அமைதியும் நேரடி கவனமும் நேரம் தவறாமையும் முக்கியம்க. உயரதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. உடனிருப்போரிடம் வீண் தர்க்கம் வேண்டாம்க. இல்லத்துல இனிமை நிலவும்க. வாழ்க்கைத் துணை உடல் நலத்துல கவனம் செலுத்தணும்க. பணவரவு சீராக இருக்கும்க. சுபகாரியங்களுக்காக கடன்பட நேரிடலாம்க. ஆனா, அதுல ஆடம்பரம் தவிர்த்தா சீக்கிரமே அடைபடும். வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் வரும்க. ஆடை, ஆபரணம் சேரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கமாகச் செயல்படறது அவசியம்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. நேர்வழியும் நேர்மையும்தான் நல்லதுங்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யறது முக்கியம்க. காது, மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் உபாதைகளை உடனே கவனியுங்க. பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.
விருச்சிகம்:
சோம்பலைத் தவிர்க்க வேண்டிய 243 நேரம்தவறாமையும் முக்கியம் . எதிர்பார்த்த மாற்றங்கள் காலகட்டம். பணியிடத்துல திட்டமிடலும் நிச்சயமா வரும்க. அதுக்கு கொஞ்சம் பொறுமை அவசியம்க. முகஸ்துதி நபர்களை உடனே விலக்குங்க. கோபத்தை அடக்கினாலே வாழ்க்கை கோணலாகாம இருக்கும் உணர்ந்து நடந்துக்குங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. வாழ்க்கைத் துணையால் பெருமை சேரும்க. குடும்பத்துல மூன்றாம் நபர் தலையிடாதவரை நிம்மதி நிலைக்கும்க. வாகனம், வீடு புதுப்பிக்க சந்தர்ப்பம் வரும்க. குடும்பத்து பெரியவங்க வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும். முதலீடுகளை நேரான பாதையில மட்டும் செய்யுங்க. அரசு, அரசியல் சேர்ந்தவங்க நிதானத்தைக் கடைப்பிடிங்க. மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சையும் தவிருங்க. எதிர்பாலரிடம் எல்லைவகுத்துப் பழகுங்க. மூட்டுகள், கழிவு உறுப்பு உபாதைகளை உடனே கவனியுங்க. துர்க்கையை வணங்குங்க. வாழ்க்கை துளிர்க்கும்.
மகரம்:
மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை பாராட்டப் படும்க. உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும்க. திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டா உன்னதமும் உயர்வுகளும் தொடரும்க. குடும்பத்துல அன்யோன்யம் அதிகரிக்கும்க. உறவுகள், நட்புகள் பிரிவு மாறி மீண்டும் சேரும். பணவரவு அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலக குலதெய்வத்தை கும்பிடறது அவசியம். குடும்பத்துப் பெரியவங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. கர்ப்பிணிகள் எச்சரிக்கையா இருங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அனுகூலக் காற்று வீசும்க. வீண் வன்மமும் வேண்டாத நட்பும் தவிர்க்கணும். இரவு நேரப் பயணத்துல இடைவழியில இறங்க வேண்டாம். ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி உபாதைகள் கவனமா இருங்க. நரசிம்மரை வணங்குங்க. நல்லவை அதிகரிக்கும்.
கும்பம்:
நிதானம் இருந்தா நிம்மதி நிலைக்கும் காலகட்டம். உங்க செயல்கள்ல முழுமையான கவனம் இருந்தா, நன்மைகள் நிலைக்கும்க. பணியிடத்துல செல்வாக்கு அதிகரிக்கும்க. யாரோட தனிப்பட்ட விஷயத்துக்கும் நீங்க ஆலோசனை சொல்ல வேண்டாம்க. பணவரவை சேமிக்கப் பழகுங்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. நல்ல வார்த்தை பேச நீங்க அடம்பிடிக்க வேண்டாம்க. வாரிசுகள் மனம்போல கல்வி, பணி, திருமண வாய்ப்புகள் அமையும்க. சுபகாரியங்கள்ல தேவையற்ற ஆடம்பரம் தவிருங்க. குடும்பத்து பெரியவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்க. சகோதர வழி உறவுகளால ஆதாயம் ஏற்படும்க. வர்த்தகத்துல வளர்ச்சி உண்டாகும். கூட்டுத்தொழில்ல இருந்து விலகி தனித்து செயல்படவும் வாய்ப்பு உண்டு. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. அதை இழந்துடாம இருக்கணும்னா, தீயசகவாசம் உங்களை நெருங்காம் பார்த்துக்குங்க. இரவு நேரப்பயணத்துல இடைவழி உணவை தவிருங்க. அடிவயிறு, முதுகு, தலைவலி உபாதைகளை உடனே கவனியுங்க. விநாயகரை வணங்குங்க. வாழ்க்கை வெளிச்சமாகும்.
தனுசு:
அவசரமும் அலட்சியமும் கூடாத காலகட்டம். பணியிடத்துல நிதானமும் நேரடி கவனமும் ரொம்பவே முக்கியம்க. வேண்டாத பழியும் வீணான அபவாதமும் வரலாம்க. எந்த சமயத்திலும் கவனமா இருந்தா, சங்கடங்களைத் தவிர்க்கலாம்க. மூன்றாம் நபர் பொறுப்புல உங்க பணி எதையும் ஒப்படைக்க வேண்டாம்க. ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதம் தவிருங்க. குடும்பத்து ரகசியங்களை யாரோடும் பகிர்ந்துக்க வேண்டாம்க. வாழ்க்கைத் துணை ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. செய்யும் தொழில்ல சோம்பல் இல்லாம செயல்படுங்க. கூட்டுத் தொழில்ல புதியமுதலீட்டை தவிருங்க. அயல்நாட்டு ஒப்பந்தங்களை தவறாம கடைபிடிங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வாக்கிலும் செயலிலும் அமைதியா இருங்க. வீண் பந்தாவை தவிருங்க. வாகனத்தை ஓட்டும் போது செல்போனை அணைத்து வையுங்க. நரம்பு பலவீனம், பரம்பரை நோய்கள், கொழுப்புசத்தி அதிகரிப்பு உபாதைகளை உடனே கவனியுங்க. பார்வதியைக் கும்பிடுங்க. வாழ்க்கை பளிச்சிடும்.
மீனம்:
தன்னடக்கம் இருந்தால், தலைநிமிரும் காலகட்டம். அலுவலகத்துல எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்க. பொறுப்பு அதிகரிக்கும்க. பிறர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம்க. குடும்பத்துல குதூகலம் இடம்பிடிக்கும்க. குழந்தைகள் வாழ்க்கைல தடைகள் நீங்கும்க. புது உறவுகளும் அதனால் வரவும் ஏற்படும்க. கொடுக்கல் வாங்கல்ல நேரடி கவனம் செலுத்துங்க. இந்த சமயத்துல பெரியவங்க உடல்நலத்துல அக்கறை அவசியம்க. செய்யும் தொழில்ல செழிப்பு உருவாகும்க. பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்க. கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. வாகனத்துல செல்லும்போது கவனச் சிதறல் தவிருங்க. கால்சியம் குறைபாடு, மூட்டுகள் தேய்மானம், பற்கள், ரத்த அழுத்த மாற்றம், சர்க்கரை சங்கடங்களை உடனே கவனியுங்க. ரங்கநாதரை வணங்குங்க. வாழ்க்கை ரம்யமாகும்.