ஆன்மிகம்

பெண்களுக்கான ராசிபலன்: இந்த ராசியினருக்கு பதவி உயர்வு நிச்சயம்!

By MUTHUKRISHNAN
31 May 2025, 06:36 AM
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
மேஷம்:

குடும்பத்தலைவிகள் பிள்ளைகளைக் கண்காணிப்பது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களின் சொல்லுக்கு மேலதிகாரிகள் மதிப்பளிப்பர். சுயதொழில் செய்யும் பெண்கள் வரவு -செலவு விஷயங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது. மாணவமணிகள் மேற்படிப்புக்காக வெளியூர் / வெளிநாடு செல்ல முயற்சிப்பார்கள், உடல்நலம் சிறக்கும்.

வழிபாடு: செவ்வாயன்று காளிகாம்பாளுக்கு சிவப்புநிற மலர்மாலை அணிவிக்கவும்.

ரிஷபம்:

குடும்பத்தலைவிகளுக்கு கணவரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் புதிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் சூடுபிடிக்கும். மாணவமணிகள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று, மேற்படிப்பிற்கு ஆயத்தமாவார்கள். பிறமொழிகளைக் கற்கவும் ஆர்வம் ஏற்படும். தேக ஆரோக்கியம் சிறப்படையும்.

வழிபாடு: புதனன்று பச்சையம்மனுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, வழிபடுங்கள்.

மிதுனம்:

குடும்பத்தில் சுபசெலவுகளுக்கு வழிபிறக்கும். திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளம்பெண்களுக்கு திருமணயோகம் கூடிவரும். வேலைக்குச் செல்லும் பெண்கள், மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவார்கள். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மாணவமணிகளின் உயர்கல்விக்கு இடமாற்றம் ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும்.

வழிபாடு: புதனன்று வராஹி அம்மனுக்கு அர்ச்சனை செய்து, வணங்குங்கள்.

கடகம்:

குடும்பத்தலைவிகள் சிக்கனத்துடன் செயல்பட்டு, ஒரு பெரிய தொகையை சேமிப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மறைமுகமாகத் தொல்லை கொடுத்துவந்த சக ஊழியர், தன் தவறை உணர்வார். சுயதொழில் செய்பவர்களுக்கு வெளியூர் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். மாணவமணிகளுக்கு மேற்படிப்பிற்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

வழிபாடு: ஞாயிறன்று முனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு, வழிபடவும்.

சிம்மம்:

குடும்பத்தலைவிகள், பொறுமையாகயும் அமைதியாகவும் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள், சக ஊழியர்களிடம் அளவாகப் பேசுங்கள். குடும்ப விஷயங்களைப் பகிரவேண்டாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ப லாபமும் கிடைக்கும். மாணவமணிகளுக்குத் தேர்வு முடிவுகள் சாதகமாக அமையும். உடல்நலம் சிறப்படையும்.

வழிபாடு: ஞாயிறன்று கருப்பண்ணசாமிக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, வணங்குங்கள்.

கன்னி:

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். திருமண வயதில் உள்ள தங்கள் மகள் / மகனுக்கு நல்ல வரன் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், இருசக்கர வாகனம் வாங்க, வங்கிக்கடன் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்குப் பெரிய ஆர்டர்கள் கைக்கு வந்துசேரும். மாணவமணிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் மேலோங்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும்.

வழிபாடு: சனியன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்தது.

துலாம்:

அக்கம் பக்கம் வீட்டாரிடம் இருந்துவந்த பிரச்னைகள் அகலும். கணவருடன் அன்னியோன்யமாக இருப்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வெளியூர் பயணங்கள் நிகழும். மாணவமணிகளுக்கு மேற்படிப்பில் தாங்கள் விரும்பிய துறை கிடைக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

வழிபாடு: சனிக்கிழமைகளில் லக்ஷ்மி நரசிம்மரை தரிசிப்பது, மிகவும் நல்லது.

விருச்சிகம்:

குடும்பத்தலைவிகள், ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சக ஊழியர்களின் அன்புக்குப் பாத்திரமாவார்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆங்காங்கே நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்துசேரும். மாணவமணிகளில் சிலர், மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். சளித் தொந்தரவுகள் வந்துபோகும்.

வழிபாடு: செவ்வாயன்று துர்காதேவிக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, வணங்குங்கள்.

தனுசு:

தம்பதியரிடையே சிறுசிறு சலசலப்புகள் வந்துபோகும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சொந்த வீடு வாங்கி, குடிபுகுவார்கள். சுயதொழில் செய்யும் பெண்களுக்குத் தங்கள் தொழிலுக்குத் தகுந்த கூட்டாளி அமைந்து, பலவிதங்களிலும் உதவிபுரிவார்கள். மாணவமணிகளுக்கு தாங்கள் எதிர்பார்த்த கல்லூரியிலேயே இடம் கிடைக்கும். உடல்நலம் மேம்படும்.

வழிபாடு: வியாழனன்று குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, வணங்கவும்.

மகரம்:

கணவர் வீட்டாரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. தங்கள் சொல்படி பிள்ளைகள் கேட்டு நடப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நீண்ட காலமாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள், தொழில் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வார்கள். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். உடல் அசதி வந்து நீங்கும்.

வழிபாடு: சனியன்று பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து, வழிபடவும்.

கும்பம்:

குடும்பத்தலைவிகள் கையில் தாராளமாகப் பணம் புழங்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். சுயதொழில் செய்பவர்கள், தொழிலை விரிவாக்க, சில வியாபார யுத்திகளைப் பயன்படுத்துவார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து, சாதனை படைக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். ஒருசிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து, மறையும்.

வழிபாடு: ஞாயிறன்று ஆஞ்சநேயருக்கு 'வெற்றிலை மாலை' சாற்றுவது நல்லது.

மீனம்:

குடும்பத்தலைவிகளின் கைக்குத் தேவைக்கேற்ப பணம் வந்துசேரும். கணவரிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சம்பளத்தைக் காட்டிலும், உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பர். சுயதொழில் செய்பவர்கள், அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. மாணவமணிகள் தங்கள் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திக்காமல் இருப்பது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

வழிபாடு: முருகப்பெருமானுக்கு சிவப்புநிற மலர் மாலை சாற்றி, வழிபடுங்கள்.