மேஷம்
அனுகூலக் காற்று வீசத் தொடங்கும் காலகட்டம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் புதிய வரவும் அதனால் மகிழ்வும் ஏற்படும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்குப் புதிய வாய்ப்புகளும் அதனால் ஏற்றமும் ஏற்படும். வயதில் முதியவர்கள், வழுக்கலான இடத்தில் கவனமாக இருங்கள். நரம்பு, மூட்டு, சுளுக்கு உபாதைகள் வரலாம். பைரவி வழிபாடு, பசுமை சேர்க்கும்.
ரிஷபம்
நல்லவை நடக்கத் தொடங்கும் கால கட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்னியம் உருவாகும். பணிகளில் மேன்மை ஏற்படும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். தரல், பெறலில் நிதானம் முக்கியம். குடும்ப விஷயங்களைப் பொதுவெளியில் பேச வேண்டாம். உணவை முறைப்படுத்துங்கள். அதீத உஷ்ணம், காரம் தவிருங்கள். ஹை ஹீல்ஸ் அணிபவர் கள் நடப்பதில் நிதானம் தேவை. முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். மாரியம்மன் வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.
மிதுனம்
சீரான போக்கு நிலவக்கூடிய காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும் காலகட்டம். கடன்களில் அவசரம் வேண்டாம். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு தவிருங்கள். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபர் தலையீடு கூடாது. பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். நிதானம் அவசியம். பணத்தைக் கையாளுவதில் கவனம் முக்கியம். யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். ஒற்றைத் தலைவலி, நரம்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
கடகம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் கால கட்டம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். உறவுகளிடம் வீண் உரசல் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பணியிடத்தில் தேவையற்ற சினம் தவிருங்கள். பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண்டாம். தூக்கத்தை முறைப்படுத்துங்கள். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தர, பெற வேண்டாம். சமூக வலைதளங்களில் நிதானம் தேவை. அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். நாகாத்தம்மன் வழிபாடு, நன்மை சேர்க்கும்.
சிம்மம்
பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வேண்டாத வாக்குறுதிகளைத் தவிருங்கள். உணவில் அதீத காரம் தவிருங்கள். மாதாந்திர உபாதைகளில் அலட்சியம் வேண்டாம். பணிபுரியும் பெண்கள் பிறருடன் தர்க்கம் தவிருங்கள். கையெழுத்திடுவதில் நிதானம் முக்கியம். பற்கள், அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் சேர்க்கும்.
கன்னி
சுமுகமான போக்கு நிலவக்கூடிய காலகட்டம். சுற்றியிருப்போர் இடையே உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். தரல், பெறலில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள் பத்திரம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். இடமாற்றத்தில் அவசரம் வேண்டாம். பிறர் குறையைப் பேசுவதைத் தவிருங்கள். வாசனைத் திரவியங்களால் அலர்ஜி வரலாம். உணவில் நிதானம் தேவை. பார்வதி வழி பாடு, பசுமை சேர்க்கும்.
துலாம்
முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வேண்டாத ரோஷம் தவிருங்கள். புது அறிமுகங்களிடம் நெருக்கம் வேண்டாம். வயதில் முதியவர்கள் உணவை முறைப்படுத்துங்கள். பணியிடத்தில் சீரான போக்கு நிலவும். இடமாற்றம் வந்தால் மறுக்க வேண்டாம். சிலருக்குப் புதிய பணிவாய்ப்புகிட்டும். மன அழுத்தம், எலும்பு உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
விருச்சிகம்
எண்ணங்கள் ஈடேறும் காலகட்டம். குடும்பத்தில் தென்றல் வீசத் தொடங்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். உறவுகளால் ஆதாயம் கிட்டும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். தரல், பெறலில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்கால உயர்வுக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். மேலதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். சோம்பலை உடனே உதறுங்கள். அடிவயிறு, நரம்பு, இடுப்பு உபாதைகள் வரலாம். சரஸ்வதி வழிபாடு, சந்தோஷம் தரும்.
தனுசு
நன்மைகள் சீராக வரக்கூடிய காலகட்டம். இல்லத்தில் இனிமை இடம் பிடிக்கும். வீணான ரோஷம் யாரிடமும் வேண்டாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. செலவுகளில் சிக்கனம் தேவை. இளம் வயதினர் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். அலுவலகத்தில் அமைதியே நல்லது. இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். வயதில் முதியவர்கள் வழுக்கலான இடத்தில் நிதானமாகக் கால்பதியுங்கள். முக உறுப்புகள், முதுகு, தோள் பட்டை உபாதைகள் வரலாம். காளியம்மன் வழிபாடு, களிப்பு சேர்க்கும்.
மகரம்
மேன்மைகள் வரத் தொடங்கும் கால கட்டம். குடும்பத்தில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும். கடந்த கசந்த காலக் கதைகளைப் பேச வேண்டாம். வரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க வாய்ப்பு உண்டு. பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பாராட்டுடன், பதவி, ஊதிய உயர்வு கைகூடும். புதிய நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பற்கள், கண், கால் உபாதைகள் வர வாய்ப்பு உண்டு. காமாட்சி வழிபாடு, களிப்பு சேர்க்கும்.
கும்பம்
சங்கடங்கள் குறையத் தொடங்கும் காலகட்டம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியர் இடையே நெருக்கம் உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனம் மகிழும்படி வாரிசு வரம் கிட்டும். உறவுகள் வருகையால் மகிழ்ச்சி சேரும். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தலைவலி, தூக்கமின்மை உபாதைகள் வரலாம். கருமாரி வழிபாடு, களிப்பு சேர்க்கும்.
மீனம்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய கால கட்டம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளிடம் வீண் கோபம் வேண்டாம். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். பணியிடத்தில் பொறுப்பு உணர்வு முக்கியம். கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. தூக்கமின்மை, ஒற்றைத் தலை வலி, சளி உபாதைகள் வரலாம். வாராஹி வழிபாடு வசந்தம் சேர்க்கும்.